For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

16 வயது பெண் பலாத்காரம்.. 22 வயது இளைஞர் விடுதலை.. பரபரப்பு தீர்ப்பு தந்த ஹைகோர்ட்.. என்ன காரணம்

16 வயது சிறுமி பலாத்கார வழக்கில் இளைஞரை விடுதலை செய்தது கோர்ட்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: 22 வயது நபர், 16 வயது பெண்ணுடன் உடலுறவு வைத்துள்ளார்.. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்த நிலையில், அந்த இளைஞரை போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று கொல்கத்தா கோர்ட் தெரிவித்துவிட்டது.. அத்துடன் அந்த இளைஞரையும் விடுதலை செய்துள்ளது.

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.. 16 வயது சிறுமியுடன் 22 வயது நபர் உடலுறவு வைத்துள்ளதாக கூறப்படுகிறது..

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி பயணம்.. 2 நாளில் நடக்க போகும் 3 முக்கிய சந்திப்புகள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி பயணம்.. 2 நாளில் நடக்க போகும் 3 முக்கிய சந்திப்புகள்

இது தொடர்பான வழக்கை கோர்ட்டும் விசாரித்தது.. அப்போது அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.. ஆனால், இதை எதிர்த்து இளைஞர் தரப்பில் கல்கத்தா ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்கள்.

 நீதிபதி

நீதிபதி

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி சப்யசாச்சி பட்டாச்சார்யா முன்பான அமர்வில் விசாரணைக்கு வந்தது... இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சொன்னதாவது: "கோர்ட்டின் கூற்றுப்படி, ஊடுருவும் பாலியல் வன்கொடுமைக்கு (penetrative sexual offence) ஒரு நபரை குற்றவாளியாக்க, பாதிக்கப்பட்டவரின் மனநிலை, முதிர்ச்சி மற்றும் முந்தைய நடத்தை ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

 போக்சோ

போக்சோ

போக்சோ சட்டம் தொடர்பான விதிகள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஒரு சரியான கட்டமைப்பாக இருக்க வேண்டும்.. மாறாக ஒரு நபர் இன்னொருவரை திருமணம் செய்ய கட்டாயப்படுத்துவதாக இருக்கக் கூடாது" என்று நீதிபதி தன்னுடைய கருத்தை சொன்னார். இதையடுத்து, இளைஞருடன் ஏற்கனவே தொடர்பு இருப்பதை பாதிக்கப்பட்ட சிறுமி ஒப்புக் கொண்டார் என்று தரப்பில் மனுதாரர் தெரிவித்தார்.. உடனே அரசு தரப்பில், "அந்த சம்பவம் நடந்தபோது, அவர் மைனர் என்பதால் அவர் விரும்பி இருந்தாலும் அதனை கருத்தில் கொள்ளக்கூடாது" என்று தெரிவிக்கப்பட்டது.

 முதிர்ச்சி

முதிர்ச்சி

இறுதியில் கோர்ட் இது குறித்து தீர்ப்பு சொல்லும்போது, "போக்சோ சட்டத்தின்படி, 17 வயது மற்றும் 364 நாட்கள் வயதுடைய ஒருவர் கூட குழந்தையாக தகுதி பெறுவார்... ஆனால் 18 வயது நிரம்பியவருக்கும் அவருக்கும் உள்ள முதிர்ச்சியில் பெரிய வேறுபாடு பெரிதளவில் இருக்காது.. இருவருக்கும் இடையேயான சேர்க்கை இயற்கையான முறையில் இருக்கும்போது, ஆண்கள் மீது மட்டும் குற்றம் சாட்டுவது சரியில்லை..

 ஆதாரம்

ஆதாரம்

அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கில் இளைஞர் கட்டாயப்படுத்திதான் உடலுறவில் ஈடுபட்டார் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை... எல்லாவற்றிற்கும் மேலாக, சம்பந்தப்பட்ட 2 பேருக்கும் ஏற்கனவே உறவு இருந்து வந்துள்ளது.. அந்த இளைஞர், சிறுமியை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.. அதனால்தான் இந்த வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.. எனவே இளைஞர் மீது குற்றம் சொல்ல முடியாது, அவரை போக்சோவில் கைது செய்யவும் முடியாது" என்று கூறி இளைஞரை கோர்ட் விடுதலை செய்துள்ளது.

 பரபரப்பு

பரபரப்பு

"வயதுக்கு வந்த பெண்ணின் சம்மதத்துடன், எவ்வித உள்நோக்கமின்றி, அன்புடன் உடலுறவு வைத்துக் கொண்டவரை, பாலியல் பலாத்கார விசாரணைக்கு உட்படுத்தக் கூடாது" என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு சில தினங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.. இப்போது, பலாத்காரம் செய்தவரை விடுதலை செய்து அறிவித்துள்ள தீர்ப்பும் பரபரப்பை கூட்டி வருகிறது.

English summary
16 year old girl rape case hearing in Calcutta Highcourt
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X