டெல்லியில் 5 பேர் கொண்ட கும்பலால் 2 இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம்.. 4 பேர் கைது
டெல்லி: டெல்லியில் ஆண் நண்பர்களுடன் வந்த இரண்டு இளம் பெண்களை 5 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒருவன் தப்பி ஓடிவிட்டான்.
தலைநகர் டெல்லியின் முக்கிய இடமான அமென் விஹார் என்ற பகுதியில் பூங்கா ஒன்று உள்ளது. இங்கு இரண்டு இளம் பெண்கள், தங்களது ஆண் நண்பர்களுடன் வந்திருந்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் இரண்டு பெண்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனை உடன் வந்திருந்த ஆண் நண்பர்கள் தட்டி கேட்டனர். இதனால் அந்த கும்பலுக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு ஆண் நண்பர்களையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. மேலும் இரண்டு பெண்களையும் அந்த கும்பல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. தகவறிந்த போலீசார் இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர். ஒருவன் தப்பியோடினான்.
போலீசார் விசாரணையில் இரண்டு இளம் பெண்களும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் பூங்காவிற்கு ஆண் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாகவும் தெரியவந்துள்ளது. பெண்களுடன் வந்த ஆண் நண்பர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications