அதிரடி “டுவிஸ்ட்”.. மேகாலயாவில் என்பிபி - பாஜக கூட்டணி ஆட்சியமைவதில் சிக்கல்! “பேக்” அடித்த கட்சி
ஹெச்.எஸ்.பி.டி.பி. கட்சி எம்.எல்.ஏக்கள் 2 பேரும் யுடிபி கட்சித் தலைவர் லக்மன் ரிம்புய் வீட்டில் நடந்த ஆலோசனையில் கலந்துகொண்டதாக திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் முகுல் சங்மா தெரிவித்துள்ளார்.
ஷில்லாங்க்: மேகாலயாவில் என்பிபி - பாஜக கூட்டணி ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரிய நிலையில், அந்த கூட்டணிக்கு ஆதரவளித்த ஹெச்.எஸ்.பி.டி.பி. கட்சி, தற்போது எந்த ஆதரவையும் அளிக்கவில்லை என்று கூறி இருக்கிறது. இதனால் மேகாலயாவில் என்பிபி பாஜக கூட்டணி ஆட்சியமைவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
60 தொகுதிகளை கொண்ட மேகாலயா மாநிலத்தில் கடந்த 2018 சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் தேசிய மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றிபெற்று ஆட்சி அமைத்தன.
ஆனால், இரு கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலால் ஆளும் கூட்டணியில் இருந்து பாஜக விலகியது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலில் ஆளும் என்பிபி மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன.

மேகாலயா தேர்தல் முடிவு
ஆனால், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக என்பிபி தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான கான்ராட் சங்மா பாஜகவை சேர்ந்த அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை சந்தித்து பேசினார். இதனால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை என்பிபி - பாஜக அமைக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி மேகாலயா உள்ளிட்ட 3 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகின.

பாஜக ஆதரவு
நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் என்பிபி கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அளவுக்கு தொகுதிகள் கிடைக்கவில்லை. 31 சட்டசபை உறுப்பினர்கள் ஆதரவை கொண்ட கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்ற நிலையில் கடைசி நேரத்தில் பாஜகவும் என்பிபி கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது.

ஆட்சியமைக்க உரிமை
இந்த நிலையில் நேற்று மேகாலயா ஆளுநர் பாகு சவுஹானை சந்தித்த கான்ராட் சங்மா, தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து. 32 சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் புதிய ஆட்சியை அமைக்க உரிமை கோரினார். மார்ச் 7 ஆம் தேதி நடைபெறும் விழாவில் கான்ராட் சங்மா பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆதரவு எம்.எல்.ஏக்கள்
இதுகுறித்து ஆளுநரை சந்தித்த பிறகு பேசிய கான்ராட் சங்மா, "எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. பாஜக ஏற்கனவே எங்களுக்கு ஆதரவளித்துவிட்டது. மேலும் சிலரும் எங்களுக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளனர்." என்று கூறினார். என்பிபி கட்சியின் 26 எம்.எல்.ஏக்கள், பாஜக எம்.எல்.ஏக்கள் 2 பேர், ஹெச்.எஸ்.பி.டி.பி. கட்சி எம்.எல்.ஏக்கள் 2 பேர், 2 சுயேட்சைகள் என 32 எம்.எல்.ஏக்கள் ஆதரவை கான்ராட் சங்மா பெற்று இருந்தார்.

டுவிஸ்ட் கொடுத்த கட்சி
இந்த நிலையில் என்பிபிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக 2 எம்.எல்.ஏக்கள் அறிவித்து உள்ளது. இதனால் ஆதரவாளர்கள் எண்ணிக்கை 30 ஆக குறைந்து இருக்கிறது. அதாவது கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சிக்கு ஆதரவளித்த ஹெச்.எஸ்.பி.டி.பி. கட்சி எம்.எல்.ஏக்கள் 2 பேரும் தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்து இருக்கிறார்கள்.

அதிகாரம் வழங்கவில்லை
இதுகுறித்து ஹெச்.எஸ்.பி.டி.பி. வெளியிட்டுள்ள கடிதத்தில், என்பிபி தலைமையில் அரசு அமைக்க தங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆதரவளிக்க எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை என்று கூறி இருக்கிறது. ஹெச்.எஸ்.பி.டி.பி. கட்சித் தலைவர் கேபி பாங்னியாங் மற்றும் அக்கட்சியின் செயலாளர் பான்போர்லாங் ரயண்டாதியாங் அந்த கடிதத்தை வெளியிட்டு உள்ளனர்.

யுடிபி தலைவருடன் ஆலோசனை
அந்த கடிதத்தில் தங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் மெதோடியன் கர் மற்றும் சக்லியர் வஜ்ரி ஆகியோர் என்பிபி கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தங்கள் அறிவிக்கவே இல்லை என்று கூறி உள்ளார்கள். அக்கட்சியின் 2 எம்.எல்.ஏக்களும் யுடிபி கட்சித் தலைவர் லக்மன் ரிம்புய் வீட்டில் நடந்த ஆலோசனையில் கலந்துகொண்டதாக திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் முகுல் சங்மா தெரிவித்துள்ளார்.

வேறு கூட்டணி
யுடிபி கட்சியில் 11, காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் தலா 5, விபிபி 4, ஹெச்.எஸ்.பி.டி.பி. 2, பிடிஎப் 2 என இந்த கட்சியில் கூட்டணி அமைத்தாலும் 29 எம்.எல்.ஏக்கள் ஆதரவே வருகிறது. இன்னும் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால், என்பிபி - பாஜக கூட்டணி ஆட்சி அமையாத வகையில் இந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து யுடிபி தலைமையில் ஆட்சியமைக்க திரிணாமூல் முயற்சித்து வருகிறது.

2 சுயேட்சைகள்
ஆனால், 2 சுயேட்சைகளின் ஆதரவு கிடைத்தால் இந்த கூட்டணியால் ஆட்சியமைத்திட முடியும். மோசமான ஆட்சியை அமையாமல் தடுக்க நமது கைகள் இணைய வேண்டும் என திரிணாமூல் தலைவர் முகுல் சங்மா தெரிவித்து உள்ளார். மேகாலயாவில் மீண்டும் என்பிபி - பாஜக கூட்டணி அமைவது ஏறக்குறைய உறுதியான நிலையில் இந்த அறிவிப்பு அம்மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்!












Click it and Unblock the Notifications