அண்ணி காலை கொழுந்தன் பிடிக்க.. மனைவி கழுத்தை நெரித்து எரித்த கணவர்.. 2019ஐ அதிர வைத்த டிக்டாக் கொலை!
டிக்டாக் மோகமுள்ள மனைவியை கணவன் கொன்ற சம்பவம் மறக்க முடியாத ஒன்றாகும்
குண்டூர்: கொழுந்தன் அண்ணியின் காலை பிடித்து கொள்ள, மனைவியின் கழுத்தை துண்டால் நெரித்து கொன்றுள்ளார் கணவர்.. டிக்டாக் வீடியோவில் அடிமையானதால், அண்ணன்-தம்பி இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை கொன்று சுடுகாட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் இந்த ஆண்டில் நடந்த கொடுமைகளில் ஒன்றாகும்.
கடந்த நவம்பர் மாதம் 17ம் தேதி நடந்த சம்பவம் இதுவாகும்: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நரசரோ பேட் என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் சித்தலா சின்ன நரசையா. இவரது மனைவி சுவர்தா.. இவருக்கு 19 வயதாகிறது.
கல்யாணம் ஆகி 5 வருடம் ஆன நிலையில், 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சுவர்தாவுக்கு டிக் டாக்கில் வீடியோ பதிவிடுவது ரொம்ப பிடிக்கும். தினமும் ஏதாவது ஒரு வீடியோவை போட்டு கொண்டே இருப்பார்.. இது நரசையாவுக்கு பிடிக்கவே இல்லை.. அதனால் மனைவியை கூப்பிட்டு கண்டித்துள்ளார்.

டிக்டாக்
ஆனால் வீடியோ பதிவிடுவதை சுவர்தா நிறுத்தவே இல்லை. இதனால் பொறுமையிழந்த நரசையா தன்னுடைய சகோதரர் சித்தாலா சின்ன வெங்கையாவுடன் சேர்ந்து சுவர்தாவை கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி, வெங்கையா காலை பிடித்து கொள்ளவும்.. நரசையா கழுத்தில் போட்டிருந்த துண்டை கொண்டு சுவர்தாவின் மூச்சை அமுக்கி நிறுத்தியுள்ளார். இதில் சுவர்தா பிணமாகிவிட்டார்.

பெட்ரோல்
உடனே அவரது உடலை பொட்லுரு சுடுகாட்டில் 2 பேரும் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கணவர் டிக்டாக் செய்யாதே என்று சொல்லவும், குழந்தையை தூக்கி கொண்டு, சுவர்தா வீட்டைவிட்டே அப்போது வெளியேறி விட்டாராம்.

நரசையா
அங்கிருந்த ஒரு ஹாஸ்டலில் ரூம் போட்டு குழந்தையுடன் தங்கி உள்ளார் சுவர்தா.. அங்கே போயும் டிக் டாக்கில் வீடியோ போடுவதை நிறுத்தவில்லை.. இந்த சமயத்தில்தான், நரசையா சமாதானம் செய்து, போன 14-ம் தேதி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

எரித்தனர்
ஆனால், 17-ம் தேதியே சுவர்தாவை அண்ணன் - தம்பி இருவரும் சேர்ந்து கொன்று எரித்து விட்டார்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்காக ஒரு லிட்டர் பெட்ரோலை இவர்கள் வாங்கி கொண்டு செல்லும் சிசிடிவி காட்சியையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். எரிக்கப்பட்ட இடத்தில் சுவர்தாவின் நகையை வைத்துதான், உண்மை குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications