‛சர்ஜிக்கல் ஸ்டிரைக்' ராணுவ வீரர்கள் 22 பேருக்கு விருது அறிவிப்பு
இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் பங்கேற்ற ராணுவ வீர்ர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து ‛சர்ஜிக்கல் ஸ்டிரைக்' தாக்குதல் நடத்திய 22 ராணுவ வீரர்களுக்கு ராணுவ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்தி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" என்ற பெயரில் இந்திய ராணுவம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மேற்கொண்டது. இதில் பங்கேற்ற ராணுவத்தினருக்கு வீர தீர விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய இந்திய ராணுவத்தை வழிநடத்திச் சென்ற 4-வது பாரா படைப்பிரிவின் மேஜர் ரோகித் சூரிக்கு, வீர மரணம் அடைந்த கூர்க்கா ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த ஹவில்தார் பிரேம் பகதூர் ரேஷ்மி மகர் ஆகியேருக்கு கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
9வது பாரா படைப்பிரிவை சேர்ந்த தலைமை அதிகாரிகள் கர்னல் கபில் யாதவ், கர்னல் ஹர்பிரீத் சாந்து ஆகியோருக்கு யுத் சேவா பதக்கங்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2வது பாரா படைப்பிரிவைச் சேர்ந்த 5 வீரர்கள் சவுரிய சக்ரா பதக்கமும், 13 வீரர்கள் சேனா பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications