காதலர் தினம் கொண்டாட அழைத்து காதலியை நண்பர்களுடன் சீரழித்த காதலன்
டெல்லி: டெல்லியில் காதலர் தினம் கொண்டாட அழைக்கப்பட்ட 25 வயது பெண்ணை அவரது காதலன் உள்பட 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
தெற்கு டெல்லியில் உள்ள ரங்புரி பகுதியைச் சேர்ந்தவர் அமித். அவர் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணை ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது காதலிக்கு போன் செய்து காதலர் தினத்தை கொண்டாட தனது வீட்டுக்கு வருமாறு அமித் அழைத்துள்ளார். அந்த பெண் அமித் வீட்டுக்கு சென்றபோது அங்கு அவரின் நண்பர்கள் 2 பேர் இருந்ததை பார்த்துள்ளார்.

அமித் தனது காதலிக்கு மயக்க மருந்து கலந்து குளிர்பானம் கொடுத்துள்ளார். அதை குடித்த உடன் அந்த பெண் மயங்கிவிட்டார். அவர் மயங்கிய பிறகு அமித் மற்றும் அவரின் நண்பர்கள் 2 பேரும் அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
மயக்கம் தெளிந்த பிறகு எழுந்த அந்த பெண் அங்கிருந்து தனது வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்தார். அவர்கள் உடனே இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அமித்தை கைது செய்தனர். மேலும் மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதிபடுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications