4 மணி நேரத்தில்.. ஒரே மருத்துவமனையில் 26 கொரோனா நோயாளிகள் மரணம்.. கோவாவில் பதற வைக்கும் சம்பவம்!
பஞ்சிம்: கோவாவில் இருக்கும் கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 26 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா கொரோனா கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் வடமாநிலங்களில் பல பலியாகும் அவலம் ஏற்பட்டு உள்ளது.
தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கையால் பல மாநில உயர் நீதிமன்றங்கள் மத்திய அரசின் ஆக்சிஜன் சப்ளே விதிமுறைக்கு எதிராக சாட்டையை சுழற்றி உள்ளது. ஆக்சிஜன் காரணமாக மக்கள் பலியாவது நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவா
இந்த நிலையில்தான் கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 26 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று அதிகாலை 2-6 மணி இடைவெளியில் வரிசையாக இத்தனை பேரும் பலியாகி உள்ளனர். இவர்கள் பலியானதற்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை.

காரணம்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான ஆக்சிஜன் இருந்ததாகவும், ஆனால் இதை கொரோனா வார்டுக்கு கொண்டு செல்லும் முன் இந்த மரணங்கள் நிகழ்ந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் எப்படி நடந்தது? மரணங்கள் எப்படி ஏற்பட்டது என்று கோவா ஹைகோர்ட் விசாரிக்க வேண்டும் என்று கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே கோரிக்கை விடுத்துள்ளார்.

விசாரணை
இதற்கான காரணத்தை விசாரிக்க வேண்டும், அரசு மருத்துவமனைக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்க உத்தரவிட வேண்டும், இந்த மருத்துவமனைக்கு 1200 பெரிய ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்பட்ட நிலையில் 400 சிலிண்டர்கள் மட்டுமே நேற்று இருந்தது என்று கூறியுள்ளார்.

நோயாளிகள்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இதுகுறித்து பேசுகையில், கோவாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. ஆனால் ஆக்சிஜன்கள் மருத்துவமனைக்கு சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டு இருக்கலாம். இதுகுறித்து விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளார். கோவாவில் இதுவரை 1,24,774 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 32586 ஆக்டிவ் நோயாளிகள் அங்கு உள்ளனர். 1804 பேர் அங்கு இதுவரை பலியாகி உள்ளனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications