பாட்னா குண்டுவெடிப்பில் தொடர்புடையவன் தங்கியிருந்த ஹோட்டலில் 27 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: பாட்னா தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி தங்கியிருந்த ராஞ்சி ஹோட்டலில் 27 வெடிகுண்டுகளை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பொதுக் கூட்டம் நடைபெற இருந்த காந்தி மைதானத்தில் பயங்கர குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் பலியாகினர்.

இந்நிலையில் பாட்னா குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஹைதர் அலி தங்கியிருந்த ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் ஹோட்டலில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது 27 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பாக ராஞ்சியில் இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications