5 வயது சிறுமியை.. மிரட்டி அழைத்து சென்ற இளைஞன்.. சரியான நேரத்தில் மீட்ட பெற்றோர்.. தூக்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் 5 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 27 வயது வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போன நிலையில் பெற்றோர்கள் தேடும் போது இந்த சம்பவம் தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பலாத்கார முயற்சி

பலாத்கார முயற்சி

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தின் மல்காபுரம் பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் கூறியுள்ளதாவது, "தீபாவளியான கடந்த 24ம் தேதியன்று மற்ற பகுதிகளை போலவே மல்காபுரத்திலும் கொண்டாட்டம் களைக்கட்டியிருந்தது. சம்பவம் நடந்த குடியிருப்பு பகுதியில் வழக்கம்போல மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வந்தனர். அன்று அதே பகுதியில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்ததுள்ளனர்.

சிறுமி மாயம்

சிறுமி மாயம்

ஆனால் அந்த குழுவில் இருந்த 5 வயது சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். இது சிறிது நேரம் கழித்துதான் மற்ற சிறுவர்கள் உணர்ந்திருக்கின்றனர். அவர்கள் சிறுமியின் வீட்டிற்கு சென்று பட்டாசு வெடிக்க சிறுமியை அழைத்துள்ளனர். ஆனால் சிறுமி வீட்டில் இல்லையே உங்களுடன் தானே விளையாடிக்கொண்டிருந்தார் என்று சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளார். அப்போதுதான் குடும்பத்தினருக்கு சிறுமி காணவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் அக்கம் பக்கத்தில் தேட தொடங்கினர்.

மீட்பு

மீட்பு

மறுபுறம் சிறுமிடம் ஆசை வார்த்தைக் கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற 27 வயதான சாய் என்கிற இளைஞன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். சிறுமி இதனை அறிந்து சத்தம் போடவும், சிறுமியை தேடிக்கொண்டிருந்த பெற்றோர் அந்த இளைஞனின் வீட்டருகில் வந்துள்ளனர். சிறுமியின் குரலைக் கேட்டு கதவை தட்டிய பெற்றோர் சிறுமியை மீட்டுள்ளனர். சிறுமி அழுதுகொண்டே இருந்ததை கவனித்த பெற்றோர் விசாரித்துள்ளனர்.

கைது

கைது

விசாரித்ததில் சிறுமி தனக்கு நேர்ந்த துயரத்தை அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் இளைஞனை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் எங்களுக்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்துள்ளோம். அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது." என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

குற்றம்

குற்றம்


நாடு முழுவதும் கடந்த 6 ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2016ம் ஆண்டு இந்த குற்றங்கள் 338,954 ஆக பதிவாகியிருந்தன. ஆனால் 2021ல் இக்குற்றங்களின் எண்ணிக்கை 26.35 சதவிகிதம் அதிகரித்து 428,278 ஆக பதிவாகியுள்ளன. பெண்களை போக பொருளாக சித்தரிக்கும் சினிமாக்கள், விளம்பரங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றை புறக்கணிப்பதன் மூலம்தான் இக்குற்றங்களை தடுக்க முடியும் என்று மகளிர் அமைப்புகளும் உளவியல் நிபுணர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+