டெல்லி: சிறார் காப்பகத்தில் 33 இளம் குற்றவாளிகள் தப்பியோட்டம்
டெல்லி: டெல்லியில் சிறார்கள் காப்பகத்தில் இருந்த 33 இளம் குற்றவாளிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த 35 ஆயிரம் ரூபாயையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சிறார் காப்பகத்தின் பணம் வைக்கப்படும் பெட்டகத்தை உடைத்து அதில் இருந்த 35 ஆயிரம் ரூபாயை வழி செலவுக்கு எடுத்துக்கொண்ட சுமார் 50 சிறுவர்கள் காவலாளியை அடித்து, உதைத்து காயப்படுத்தினர்.
கண்ணாடிகளை கல்லால் அடித்து உடைத்து சூறையாடிய அவர்கள், மதில் சுவரின் மேல் பகுதியில் உள்ள முள்வேலியின் மீது மெத்தைகளை விரித்து காப்பகத்தின் நிர்வாக பகுதிக்கு சென்றுள்ளனர்.
அங்கு சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டு சூப்பிரண்ட் அலுவலகத்தை தீயிட்டு கொளுத்தி அங்கு வைக்கப்பட்டிருந்த கோப்புகளை எல்லாம் தீயில் தூக்கிப் போட்டு எரித்தனர். அதேபோல் வெளிப்பகுதிகளில் உள்ள பூட்டிய மரக்கதவுகளையும் தீக்கிரையாக்கி சுமார் 33 இளம் குற்றவாளிகள் தப்பியோடி விட்டனர்.
அவர்களில் 15 பேரை போலீசார் பிடித்துள்ளனர். எஞ்சியுள்ளோரையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. திரைப்படங்களில் வரும் சிறை உடைப்பு காட்சிகளுக்கு சற்றும் குறையாமல் இந்த சாகசத்தை சிறார் குற்றவாளிகள் நிகழ்த்தியுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications