Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துண்டு 35.. வேற வழியேயில்லை.. பிரதமர் மோடியே இங்கு மீண்டும் தேவை.. பாஜக லிஸ்ட்டில் சேர்ந்த "ஷ்ரத்தா"

35 துண்டுகளாக வெட்டிய ஷ்ரத்தா கொலை குறித்து அசாம் முதல்வர் பிரச்சாரம் செய்தார்

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: நாட்டில் பரவும் லவ் ஜிகாத்துக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி குரல் கொடுத்திருக்கிறார் அசாம் முதல்வரான ஹிமந்த பிஸ்வா சர்மா.
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வரும் டிசம்பர் 1, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்க போகிறது.. முதற்கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இந்த முறை குஜராத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது... பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. அதனால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

 ஃப்ரிட்ஜ்

ஃப்ரிட்ஜ்

அந்தவகையில், பாஜக முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் என பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. தேர்தலின்போது தேசிய தலைவர்கள், குஜராத்துக்கு வந்து பிரச்சாரமும் செய்ய வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.. எனினும், ஹிமாந்தா பிஸ்வா சர்மா செல்லுமிடமெல்லாம் தன்னுடைய பிரச்சாரத்தில் மோடியை 3வது முறையாக பிரதமராக்கும்படி அம்மாநில மக்களை கேட்டுக் கொண்டு வருகிறார்.. குஜராத்தில் அசாம் மாநிலத்தில் இருந்து புலம்தொழிலாளர்கள் அதிகம் என்பதால், அவர்களின் வாக்குகளை குறி வைத்தும், ஹிமாந்தா பிஸ்வா சர்மா தன் பிரச்சாரத்தை தீவிரமாக்கி வருகிறார்.

 லவ் ஹிஜாத்

லவ் ஹிஜாத்

அதேசமயம், கடந்த ஒரு மாத காலமாகவே, ஷர்த்தாவின் கொலை விவகாரத்தை சுற்றியே இவரது பிரச்சாரம் அமைந்து வருகிறது. 4 நாட்களுக்கு முன்பு பிரச்சாரம் செய்யும்போதுகூட, "ஷ்ரத்தாவின் கொலை லவ் ஜிகாத் என்ற பெயரில் நடந்துள்ளது. நாம் நம்முடைய சமூகத்தை பாதுகாக்க வேண்டும்... நாட்டில் வலுவான தலைவர் இல்லாவிட்டால் ஒவ்வொரு நகரத்திலும் அப்தாப் பிறப்பார்... இதனால் மோடி 3வது முறையாக பிரதமராக்க வேண்டுவது மிகவும் முக்கியம் என்று பேசியிருந்தார்.

 35 பீஸ்கள்

35 பீஸ்கள்

நேற்றைய தினமும், தனசுரா பகுதியில் பிரச்சார கூட்டங்களில் அவர் பங்கேற்றார்.. அப்போது பேசியபோது, "அப்தாப் மும்பையில் இருந்து ஷ்ரத்தா என்ற சகோதரியை வரவழைத்து லவ் ஜிகாத் என்ற பெயரில் 35 துண்டுகளாக வெட்டினார். அவர் அந்த உடலை ஃபிரிட்ஜ்-க்குள் வைத்துள்ளார்... உடல் பாகங்கள் ஃப்ரிட்ஜில் இருக்கும்போது, ​​​​வீட்டிற்கு இன்னொரு பெண்ணை அழைத்து வந்து டேட்டிங் செய்ய தொடங்கியுள்ளார்..

 இந்து பெண்கள்

இந்து பெண்கள்

ஏன் அவர் இந்து பெண்களை மட்டும் குறி வைத்து காதலில் வீழ்த்துகிறார் என்று போலீசார் விசாரித்தனர். ​​அவர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்கள் என்பதால் அப்படி செய்வதாக அப்தாப் பதிலளித்துள்ளார்.. அதனால்தான் லவ் ஜிகாத்க்கு எதிராக நாட்டிற்கு கடுமையான சட்டம் தேவையாக இருக்கிறது.. மறுபடியும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, பிரதமர் மோடி போன்ற வலிமையான தலைவர் ஆட்சியில் நீடிப்பது முக்கியம்... இல்லாவிட்டால் நாட்டின் ஒவ்வாரு நகரத்திலும் இதுபோன்ற அப்தாப்கள் பிறப்பார்கள். நாட்டிற்கு சக்தி வாய்ந்த தலைவர் இல்லை என்றால், எங்கள் சமூகத்தை எங்களால் பாதுகாக்க முடியாது.. அதனால் 2024ம் ஆண்டு தேர்தலில் மோடியை 3வது முறையாக மீண்டும் பிரதமராக்குவது மிகவும் முக்கியம் என்று பேசியுள்ளார்.

 வாக்குமூலம்

வாக்குமூலம்

எனினும், பாஜகவின் இந்த தேர்தல் யுக்தியை பலரும் விமர்சித்து வருகின்றனர்.. ஷ்ரத்தா - அப்தாப் காதலை, லவ் ஜிகாத் என்பதன் கீழாக பாஜகவினர் சேர்த்துள்ளனர்... ஷ்ரத்தாவை கொன்ற கையோடு, இந்து பெண்களாக குறிவைத்து அப்தாப் வீட்டுக்கு அழைத்து வந்தது குறித்து போலீஸ் விசாரணையில் அப்தாப் வாக்குமூலம் தந்துள்ளதால்தான், முதல்வர் சர்மா தன்னுடைய குஜராத் தேர்தலில் குரல் எழுப்பி வருவதாக தெரிகிறது.. இதனிடையே, அப்தாப்புக்கு மரண தண்டனை விதிக்குமாறு மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் சில அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+