ரூ.37,000 கள்ள நோட்டுகள்.. பழைய நோட்டு போல டெபாசிட் செய்ய வந்த பெண் கைது
கள்ள நோட்டுகளை பழைய 500 மற்றும் 1000 ரூபாயை மாற்றுவது போல வங்கியில் டெபாசிட் செய்ய வந்த பெண் போலீசாரிடம் சிக்கினார்.
திருவனந்தபுரம்: கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை சாக்காக வைத்துக் கொண்டு தன்னிடம் இருந்த பழைய நோட்டுகளை
வங்கியில் செலுத்திவிடலாம் என்று முயற்சி செய்த பெண் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

கேரள மாநிலம் மலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மரியம்மா. இவர் தன்னிடம் இருந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக கொன்டோட்டி என்ற பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளைக்கு சென்றுள்ளார். அங்கு வழக்கம் போல தான் கொண்டு வந்திருந்த 49 ஆயிரத்து 500 ரூபாயை டெபாசிட்டாக செலுத்தியுள்ளார். பணத்தை ஆய்வு செய்த வங்கி ஊழியர் அதில் கள்ள நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மரியம்மா கொடுத்த 49,500 ரூபாயில் 37 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, வங்கி ஊழியர்கள் , அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, தனது பிள்ளைகள் வெளியூரில் வேலை செய்து வருவதாகவும், அவர்கள் அனுப்பிய பணம் இது என்றும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் மரியம்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும், மக்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் அஞ்சலகங்களில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என்று கூறியது.
இதனையடுத்து, கடந்த 10ம் தேதியில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வங்கிகளில் குவிந்து தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். இந்த நிலையில்தான் மரியம்மா தன்னிடம் இருந்த கள்ள நோட்டுகளை வங்கியில் செலுத்த முயன்ற போது பிடிபட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications