379 உணவு வகைகள்.. ஐய்யோ இதை சாப்பிடவே ஒரு நாளாகுமே.. மருமகனுக்கு மாமியாரின் பொங்கல் விருந்து
விசாகபட்டினம்: ஆந்திர மாநிலம் கோதாவரியில் மருமகனுக்கு மாமியார் 379 உணவு வகைகளை சமைத்து விருந்தளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள கோதாவரி விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவை. மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர் பீமாராவ் மகள் குஷ்மா.
இவரை விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளியை சேர்ந்த புத்தா முரளிதர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிக்கு தலை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சங்கராந்தி
இந்த விழாவை ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை என அழைப்பர். எனவே முரளிதரையும் மகள் குஷ்மாவையும் பீஷ்மாராவ் தனது வீட்டிற்கு விருந்துக்காக அழைத்திருந்தார். பொதுவாக மகர சங்கராந்தி அன்று ஆந்திராவில் கலர் கலராக கோலம் போடப்படும். மக்கள் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவர்.

எலுரு மாவட்டம்
ஆனால் எலுரு மாவட்டத்தில் இந்த பண்டிகை மிகவும் சிறப்புமிக்கதாக கொண்டாடப்பட்டது. மாமியார் மருமகன் முரளிதருக்கு 379 உணவு வகைகளுடன் கூடிய ராஜ விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அண்மைக்காலமாக இது போல் மருமகனுக்கு நிறைய பேர் விருந்தளித்துள்ளனர். ஆனால் அவற்றில் பீஷ்மாராவ் அளித்த விருந்தில் உள்ள உணவு வகைகளின் எண்ணிக்கைதான் அதிகம்.

365 உணவு வகைகள்
இந்த 379 உணவு வகைகளில் மாப்பிள்ளை முரளிதரன் பார்த்து வாயடைத்து போனார். அவர் அவற்றில் 10 சதவீதத்தை கூட சாப்பிடவில்லை. இந்த 379 உணவு பொருட்களை தயாரிக்க மாமியாருக்கு 10 நாட்கள் தேவைப்பட்டதாம். முரளிதருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதிதான் திருமணம் நடந்தது.

30 வகையான பொரியல்கள்
மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரத்தில் கடந்த ஆண்டு ஒரு குடும்பத்தினர் 365 உணவு வகைகளுடன் விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். 30 வகையான பொரியல்கள், சாதம், புளியோதரை, பிரியாணி, பாரம்பரிய கோதாவரி மாவட்ட இனிப்புகள், குளிர்பானங்கள், பிஸ்கெட்டுகள், பழங்கள், கேக் வகைகள் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டது.

கோதாவரி மாவட்டம்
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் மருமகன்களுக்கு சங்கராந்தி பண்டிகை அன்று பெரிய அளவிலான விருந்து வைத்து கவுரவிப்பது தொன்று தொட்டு நடக்கும் ஒரு விஷயமாகும். பொதுவாகவே கோதாவரி மாவட்டம் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றதாகும். மருமகளுக்கு மாமியார் விருந்தளிப்பது மருமகனுக்கு மாமியார் விருந்தளிப்பது என விரும்தோம்பல் ஆந்திராவில் களைகட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications