For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்சி எஸ்டி சட்ட திருத்தம் மீதான மறுசீராய்வை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

மத்திய பிரதேசத்தில் கடையடைப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலால் 4 தலித்துகள் பலியாகிவிட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தீவிரமடையும் தலித் மக்களின் போராட்டத்தால் வட மாநிலங்களில் பதற்றம்

    போபால்: தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சுப்ரீம் கோர்ட் திருத்தம் மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த கடையடைப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலால் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 5 பேர் பலியாகிவிட்டனர். அந்த திருத்தத்தை மறுசீராய்வு செய்யும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    1989-இல் உருவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமை தடுப்பு சட்டம் அமலில் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த சட்டத்தை நீர்த்து போக செய்யும் அளவுக்கு சுப்ரீம் கோர்ட் அதில் திருத்தங்களை கடந்த 20-ஆம் தேதி மேற்கொண்டது.

    4 were died in MP after clashes happens for amendment in SC/ST act

    இதற்கு தலித்துகள் எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப்பில் அதிகளவில் தலித்துகள் வசிக்கின்றனர். இதனால் இங்கு நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தை அடுத்து பேருந்து போக்குவரத்தை அந்த மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது.

    10, பிளஸ் 2 மாணவர்களுக்கான சிபிஎஸ்இ பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தின்போது மோதல் ஏற்பட்டது.

    இதில் சிக்கி தலித் சமூகத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர். இதனிடையே தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நிகழ்த்தப்பட்ட திருத்தங்களை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுவதால் அதை அவசர வழக்காக விசாரிக்கவும் வலியுறுத்தியது. எனினும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மறுப்பு தெரிவித்துவிட்டார்.

    English summary
    4 Dalits were died after clash happens while they protest against Supreme Court which amends SC/ST act.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X