பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற கெடு- வாகா எல்லை மூடல்- வர்த்தக தடை!
டெல்லி: பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று அந்நாடு கெடு விதித்துள்ளது. மேலும் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்பரப்பில் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடனான வாகா எல்லை மூடப்பட்டு அனைத்துவிதமான வர்த்தக நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத வெறியர்களாள் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்ககு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன.
- பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது
- பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது
- வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன
- பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது
- பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
இதனடிப்படையில் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது இன்று நிறுத்தப்பட்டது. இந்தியாவின் இந்த கடும் நடவடிக்கைகளால் பாகிஸ்தான் கடுமையான அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதிகளும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் பாகிஸ்தானும் சில முடிவுகளை அறிவித்துள்ளது.
- பாகிஸ்தானில் இருந்து இந்தியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற வேண்டும்
- பாகிஸ்தான் வான்பரப்பை இந்திய விமானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது
- வாகா எல்லை வழியான போக்குவரத்து நிறுத்தப்பட்டு எல்லை மூடப்படுகிறது
- இந்தியாவுடனான பொருளாதார உறவுகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது
மேலும், சிந்து நதிநீர் திறப்பை இந்தியா நிறுத்தினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications