அந்தமான், மியான்மர் கடலில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை இல்லை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேற்று அந்தமான், மியான்மர் கடலில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்தமான் கடலில் நேற்று இரவு 7.10 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் போர்ட்பிளேரில் இருந்து 250 கிலோ மீட்டர் கிழக்கில் கடலுக்கடியில் 44 கிலோ மீட்டர் ஆழத்தில் 5.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக வானிலை ஆய்வு மைய டைரக்டர் ஜெனரல் லட்சுமண்சிங் ரத்தோர் தெரிவித்தார்.

5.8 earthquake strikes between Andaman Islands and Myanmar

இதன்மூலம் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்றபோதிலும் நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த 29-ந்தேதி 5.5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் பதிவானது. இது கடந்த 2 நாட்களில் ஏற்பட்ட 2-வது நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல மியான்மர் கடலிலும் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரில் மெர்குயி நகருக்கு 185 மைல் தெற்கில், கடலில் 19.3 மைல்கள் ஆழத்தில் 6.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+