ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்.. ரஜோரியில் 5 இந்திய வீரர்கள் வீரமரணம்! ராணுவ ஆபரேஷனில் ஷாக்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ரஜோரியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ரஜோரியில் இன்று இந்தியா பாதுகாப்பு படை சார்பாக தீவிரவாதிகளை சோதனை செய்ய படைகள் அனுப்பப்பட்டன. சமீபத்தில் அங்கே நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தவும், தீவிரவாதிகளை பிடிக்கவும் இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டது.

இந்த ஆபரேஷனின் போது தீவிரவாதிகள் - ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. சரமாரி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. இதில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்,
ரஜோரி மாவட்டத்தின் கண்டி பகுதியில் உள்ள கேஸ்ரி மலையில் இந்த தீவிர எதிர்ப்பு நடவடிக்கை இன்று நடந்தது. ஒரு குகைக்குள் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது குறித்து ராணுவத்திற்கு சீக்ரெட் தகவல் கிடைத்து அங்கே சென்று சோதனை செய்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த நிலையில் ரஜோரியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே3 பேர் உயிரிழந்த நிலையில் காயம் அடைந்த 6க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சையில் இருந்த 6 பேரில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
தற்போது அங்கே கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் அங்கே நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தவும், தீவிரவாதிகளை பிடிக்கவும் இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டது.
சமீபத்திய அட்டாக்;

கடந்த சில நாட்களுக்கு முன் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாடா துரியன் நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. 6 ராணுவ வீரர்கள் பயணம் செய்து கொண்டு ராணுவ வாகனத்தில் திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
இந்த தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
அங்கே ராணுவ வீரர்கள் தேடுதல் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போது இந்த சம்பவம் நடந்து உள்ளது. பூன்ச் மாவட்டத்தின் ரஜோரி செக்டார் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பீம்பர் கலி மற்றும் பூஞ்ச் இடையே ராணுவம் வாகனம் சென்று கொண்டு இருந்த போது அங்கே மழை காரணமாக சாலையில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்துள்ளது.
இதை பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். கையெறி குண்டுகளை வீசியதால் ராணுவ வீரர்களால் தப்பிக்க முடியவில்லை. ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள்தான் இந்த ததுப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூடு மூன்று பக்கங்களிலிருந்தும் நடத்தப்பட்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து கையெறி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இதனால் வீரர்களால் சுதாரிக்க முடியவில்லை.
எரிபொருள் டேங்கில் தீப்பிடித்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் அங்கே கையெறி குண்டு விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஜெய்ஷ் ஆதரவு பெற்ற தீவிரவாதக் குழுவான மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAFF - People's Anti-Fascist Front) எனப்படும் அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.












Click it and Unblock the Notifications