கோயிலுக்குள் நடந்த கொடூரம்.. குழந்தைனு கூட பார்க்கலையே.. உத்தரப்பிரதேசத்தில் பகீர் சம்பவம்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை இழுத்துச் சென்று கோயிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பக்கத்து வீட்டு நபரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் பெண்கள், சிறுமிகள், மூதாட்டிகள் என அனைத்து தரப்பினரும் பாலியல் சீண்டல், பாலியல் தொந்தரவு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, குழந்தைகள், சிறுமிகளுக்கு எதிரான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக கடும் நடவடிக்கைகளும், விழிப்புணர்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதனால், பெண் குழந்தைகளைப் பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பக்கத்து வீட்டு நபர் கோயிலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் கடந்த மே 18 ஆம் தேதி நடைபெற்றுள்ள நிலையில், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள ஜகதீஷ்புரா பகுதியில் சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த சிறுமியை பக்கத்து வீட்டு நபர் ஒருவர் கோயிலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அலறித் துடித்த சிறுமி சப்தம் போட்டுள்ளார். சிறுமியின் சப்தம் கேட்டு அவரது பாட்டி ஓடிவந்த நிலையில், அந்த நபர் அவரைத் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.
அதற்குள் அருகிலிருந்த பொதுமக்கள் அந்த நபரை துரத்திப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின்பேரில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பவித்ரா என்ற அந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். போலீஸாரால் கைது செய்யப்பட்ட அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவருடைய குடும்பத்தினரே கூறியதால் வேறொரு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த நபருக்கு மனநிலை சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு மனநிலை நன்றாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து, அம்மாநிலத்தின் மகளிர் ஆணையத் தலைவர் பபிதா சௌகான் கூறியதாவது: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். பாதிக்கப்பட்ட சிறுமியின் வீடு மற்றும் சம்பவம் நடந்த கோயிலுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறுமி மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, பக்கத்து வீட்டு நபரே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications