Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

500 பெண்களை.. குளியறையில் "சீண்டிய" ஆசிரியர்.. பிரதமர் வரை புகார் போயிருச்சு.. தகாத முறையில்: ஓ காட்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: எங்களை தனித்தனியாக.. தன்னுடைய ஆபீஸ் பாத்ரூமுக்கு அழைத்து சென்று தகாத முறையில் தொடுகிறார் என்று 500 மாணவிகள் பேராசிரியர் மீது மீண்டும் புகார் தந்துள்ளது, பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஹரியானா மாநிலம், சவுத்ரி தேவி லால் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் மீது, நடவடிக்கை வேண்டும் என்று கேட்டு இந்த 500 மாணவிகளும் பாலியல் புகார் தந்துள்ளார்கள்.. இது தொடர்பாக, பிரதமர், முதல்வர், ஆளுநர், மகளிர் ஆணையத்திற்கு சம்பந்தப்பட்ட 500 மாணவிகளும் இணைந்து கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

500 Girl Students complaint against Haryana chaudhary devi lal university Professor and letter to PM Modi

இந்தக் கடிதத்தின் நகலை, பல்கலைக்கழக துணைவேந்தர் அஜ்மீர் சிங் மாலிக், ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ், தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா உட்பட மாநில அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் குறிப்பிட்ட ஊடக நிறுவனங்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

ஊடக நிறுவனம்: அந்த கடிதத்தில் உள்ளதாவது: "எங்களை தனித்தனியாக, தன்னுடைய அலுவலக குளியலறைக்கு அழைத்து சென்று தகாத முறையில் பேராசிரியர் தொடுகிறார். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எங்களை பேராசிரியர் மிரட்டினார். பல மாதங்களாகவே நடந்து வருகிறது.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் உட்பட எல்லா ஆதாரங்களையும் பேராசிரியர் அழித்துவிட்டார்.. இப்போது, பல்கலைக்கழகத்தின் மீதே எங்களுக்கு நம்பிக்கை இல்லை. தயவுசெய்து எங்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்.

கண்ணியம்: இந்த பேராசிரியரை நீக்கிவிட்டு, வேறு ஒருவரை நியமனம் செய்யுங்கள். பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அது எங்கள் பெயரைக் கெடுக்கும் என்பதால், எங்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்களை எழுத முடியாது. எங்கள் குடும்பத்தின் கண்ணியமும் பாதிக்கப்படும். அவருக்கெதிராக பேசினால் எங்களை வெளியேற்றி விடுவோம் என மிரட்டியிருக்கிறார். காணம், அவருக்கு அரசியல் செல்வாக்கும் இருக்கிறது.

இதையடுத்து, இந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவிவிடவும், பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கு முன்பும் இதுபோலவே புகார் கடிதத்தை மாணவிகள் எழுதியிருக்கிறார்களாம்.

ஆதாரம் இல்லை : அதாவது கடந்த வருடம் ஜூன் மாதம் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்று விசாரணையில் பல்கலைக்கழகம் சொல்லிவிட்டதாம். பிறகு, நவம்பர் மற்றும் டிசம்பரில் ஆளுநருக்கு 2 முறை புகார் கடிதம் சென்றிருக்கிறது.

உடனே அதுசம்பந்தமான விசாரணை நடத்துமாறு, பல்கலைக்கழகத்திடம் ஆளுநர் அலுவலகம் கூறியிருக்கிறது.. அப்போதும் பேராசிரியர் குற்றமற்றவர் என்று பல்கலைக்கழகம் விசாரணையில் சொல்லிவிட்டதாம். இப்போது மீண்டும் பிரதமர், முதல்வர், ஆளுநர், மகளிர் ஆணையத்துக்கு மாணவிகள் கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சியை தந்துவருகிறது.

ஆதாரமற்றவை: இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் ராஜேஷ் பன்சால் சொல்லும்போது, "பல்கலைக்கழக விசாரணையில் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என வந்திருக்கிறது. ஆனால், கடிதத்தில் இப்போது 500 மணவிகள் குறிப்பிடப்பட்டிருப்பதால், காவல்துறையும், பல்கலைக்கழகமும் இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்கிறது" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதேபோல, காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஸ்ரீகாந்த் ஜாதவ் இந்த புகார் குறித்து சொல்லும்போது, இது தொடர்பாக ஏற்கனவே பலரிடமிருந்து வாக்குமூலங்களையும் பெற்றுள்ள நிலையில், தற்போது மேலும் பல்வேறின் வாக்குமூலங்களை எடுத்து வருவதாகவும், முதற்கட்ட விசாரணைக்கு பிறகு எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேபோல, மாணவிகள் கடிதம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பல்கலைகழகத்தின் பதிவாளரும் உறுதி தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு: ஆனால், சம்பந்தப்பட்ட பேராசிரியரோ மாணவிகளின் குற்றச்சாட்டை மறுக்கிறார்.. "நான் தேவையில்லாமல் குறி வைக்கப்படுகிறேன். எனக்கும் இந்த குற்றச்சாட்டிற்கும் துளியும் சம்பந்தம் இல்லை.. எந்தவிதமான விசாரணையையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+