• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு நைட்டுக்கு ரூ.500.. அதுவும் ஜெயிலுக்குள்ளேயே.. ரெகமண்டேஷன் வேற.. காரணம் கேட்டால் ஆடிப்போயிடுவீங்க

Google Oneindia Tamil News

டேராடூன்: ஒரே ஒரு நைட் ஜெயிலில் தங்கி செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.. இதற்கு 500 ரூபாய் கட்டணமும் விதிக்கப்படுகிறது.. ஆனால், அதற்கான காரணம்தான் ஆச்சரியத்தை தந்து வருகிறது.
தெலங்கானா மாநிலத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியானது.. மேடக் மாவட்டத்தில் 220 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயேர்களால் கட்டப்பட்ட சிறைச்சாலை ஒன்று உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கிய ஜெயில்களில் ஒன்றாக இது விளங்கியது.. அதற்கு பிறகு, இந்த ஜெயில் அருங்காட்சியகமாக மாற்றிவிட்டார்கள்..

ஷாக்! வீட்டில் பாகிஸ்தான் தேசியக்கொடி ஏற்றிய இளைஞர்.. பிடித்து ஜெயிலில் தள்ளிய உத்தரபிரதேச போலீஸ்ஷாக்! வீட்டில் பாகிஸ்தான் தேசியக்கொடி ஏற்றிய இளைஞர்.. பிடித்து ஜெயிலில் தள்ளிய உத்தரபிரதேச போலீஸ்

 ரூமில் ஒருநாள்

ரூமில் ஒருநாள்

அம்மாநிலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில், இந்த சிறைச்சாலையில் உள்ள சிறை ரூம்களில், சுற்றுலா பயணிகள் ஒரு நாள் முழுக்க தங்கிச்செல்லலாம் என்று ஒரு நூதன அறிவிப்பு வெளியிட்டார்கள்.. இதற்கு கட்டணமாக ஒரு நாளுக்கு 500 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் அம்மாநில சிறைத்துறை அப்போது அறிவித்திருந்தது.. ஜெயிலில் உள்ள ரூமில் தங்க வருபவர்களை, சிறை கைதி போலவே நடத்துவார்களாம்.. அதுதான் இந்த திட்டத்தின் ஸ்பெஷாலிட்டி.

 ஈயத்தட்டு ஈயடம்ளர்

ஈயத்தட்டு ஈயடம்ளர்

அதாவது கைதிகளுக்கான தரும் அதே யூனிபார்ம் தருவார்கள்.. ஈயத்திலான சாப்பாட்டு தட்டு, டம்ளர், குளியல் சோப் இப்படி கைதிகளுக்கு என்னென்ன தரப்பட்டு வருகிறதோ, அதையெல்லமே இந்த பயணிகளுக்கும் தருவார்கள்.. ஒருநாள் முழுக்க கைதிபோல் இருந்து கொண்டு, சிறை வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.. இது எதற்காகவென்றால், சிறைக்குள் இருக்கும் சிறைவாசிகளின் அனுபவத்தை வாடிக்கையாளர்களும் நேரடியாகவே பெற வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடாம்.

மரக்கன்று

மரக்கன்று

ஆனால், ஒரே ஒரு விஷயம் மட்டும் விதிவிலக்கு.. மற்ற கைதிகளை போல இவர்கள் வேலை செய்ய தேவையில்லை.. ஆனால் தாங்கள் தங்குமிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.. இன்னொரு கண்டிஷனும் உள்ளது.. ஜெயிலை விட்டு கிளம்பும்போது, ஒரு மரக்கன்றை கண்டிப்பாக நட்டுவைத்துவிட்ட போக வேண்டும்.. இந்த அறிவிப்பு அப்போது அம்மாநிலத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.. இதைபோலவே ஜார்க்கண்ட் உட்பட வேறு சில மாநிலங்களும் இந்த அறிவிப்பை பின்தொடர்ந்தன. ஆனால், இந்த வடமாநில மக்களை என்ன செய்வது? இதேபோல சிறையில் தங்குவதற்கான ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.. ஆனால், அதன் பின்னணியே வேறு..

 +500 ரூபாய்

+500 ரூபாய்

உத்தர்காண்ட் மாநிலத்தில் ஹால்த்வானி பகுதியில் சிறைச்சாலை ஒன்று உள்ளது.. இந்த சிறையில் இப்போது கைதிகளை யாரும் அடைப்பதில்லை... மிக பழமையான ஜெயில் இது.. 1903-ல் கட்டப்பட்டுள்ளது.. ஆனால், இந்த சிறை வளாகத்தில் சிறைக்கூடம், ஆயுதக் கிடங்கு, ஊழியர்கள் குடியிருப்பு ஆகியவை அமைந்துள்ளன. இந்த சிறையில் ஒரு இரவு தங்கி செல்லலாம் என்றும் அப்படி ஜெயிலில் தங்க வருவதற்கு 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, ஜாதகத்தில் நேரம் சரி இல்லை என்று நம்புபவர்கள், ரூ.500 கட்டணம் செலுத்தி இந்த ஜெயிலுக்குள் செல்கின்றனர்.. சிறையில் ஒருநாள் தங்கி விட்டு வந்தால் தங்களுக்கு இருக்கும் அந்த தோஷம் போய்விடுகிறதாம்..

 களஞ்சியம்

களஞ்சியம்

மேலும் எந்த காலத்திலும் அந்த தோஷம் தங்களை மீண்டும் தீண்டாது என்றும் வலுவாக நம்புகிறார்களாம்.. இதைபற்றி, ஹால்த்வானி சிறை துணை கண்காணிப்பாளர் சதீஷ் சுகிஜா சொன்னதாவது: "1903-ம் ஆண்டு கட்டப்பட்ட ஹல்த்வானி சிறைச்சாலையில் 6 பணியாளர்கள் தங்கும் அறைகளுடன் ஒரு பழைய ஆயுத களஞ்சியம் இருக்கிறது. ஆனால், இவைகள் சமீப காலமாக செயல்படுத்தப்படவில்லை.. அதனால், சிறை விருந்தினர்களுக்காக தயாராகி கொண்டிருக்கிறது.. தோஷம் நீங்க இங்கு பலர் வருகிறார்கள்.. சிலர் மூத்த அதிகாரிகளின் பரிந்துரைகளில் வருகிறார்கள்..

யூனிபார்ம்

யூனிபார்ம்

பரிந்துரைக்கப்பட்ட நபர்களை சில மணிநேரம் சிறையில் இருக்க அனுமதிக்குமாறு அடிக்கடி மூத்த அதிகாரிகளிடமிருந்து உத்தரவுகள் எங்களுக்கு வருகின்றன.. இதெல்லாம் சம்பந்தப்பட்ட நபரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளின்படி சிறைத் தண்டனை தவிர்க்க முடியாதது என்று ஜோதிடர்கள் அறிவுறுத்த்தியதாக இருக்கலாம்.. அத்தகையவர்களுக்கு இந்த செயல் மூலம் போலி சிறையை உருவாக்க முடியும்... அதில் ஓர் இரவு மட்டும் தங்குவதற்கு பெயரளவில் 500 ரூபாய்க்கு கட்டணமும் விதிக்கப்படுகிறது.. அதோடு அவர்களுக்கு ஜெயில் யூனிபார்ம் + ஜெயில் சாப்பாடு வழங்கப்படும்" என்றார்.

 தோஷம் + கிரகங்கள்

தோஷம் + கிரகங்கள்

இதைபற்றி ஹல்த்வானியை சேர்ந்த ஜோதிடர் மிருத்யுஞ்சய் ஓஜா என்பவர் சொல்லும்போது, "சனி, செவ்வாய் உள்ளிட்ட 3 கிரகங்கள், ஒருவரின் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் அமைந்தால், அந்த நபர் ஜெயிலுக்கு போய் சிறைவாசத்தை அனுபவிக்க நேரிடும்... அதுமாதிரியான சூழ்நிலையில், கிரக நிலைகளின் மோசமான விளைவுகளை தவிர்ப்பதற்காகத்தான், சிறையில் இரவை கழிக்க சொல்லி அறிவுறுத்துகிறோம். இதுதொடர்பாக, சிறைத்துறை ஆய்வாளர் ஜெனரலிடமே நான் கோரிக்கை வைத்திருந்தேன்.. அவரும் இதை பாராட்டினார்.. இது குறித்த விரிவான திட்ட அறிக்கையை அனுப்பும்படியும் என்னிடம் கேட்டுக் கொண்டார்" என்று பூரித்து சொல்கிறார்.

 ஒரு நைட்

ஒரு நைட்

இந்த தேசத்திற்காக, எத்தனையோ தியாகிகள் தங்கள் ரத்தத்தையும், உயிரையும் மனமுவந்து தந்திருக்கிறார்கள்.. தன் ரத்த பந்தத்தையும், குடும்பத்தையும் கடைசிவரைக்கும் பார்க்க முடியாமல், வாழ்நாளெல்லாம் ஜெயிலுக்குள்ளேயே கிடந்து மடிந்துபோன தமிழக வீரர்கள் எத்தனையோ பேர் உண்டு.. ஆனால், அவர்களுக்கெல்லாம் தீராத தோஷம், ஒரே ஒரு நைட் சிறையில் தங்கினால் நீங்கும் என்பது சாத்தியமா? வடமாநில மக்களுக்கு முழுமையான "கல்வி அறிவு' எப்போது சாத்தியமாகும்?!

English summary
500 rs to get real life jail experience in uttarakhands and what does haldwani astrologer say
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X