Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு முன்னேற்றம் தரும் 7 நாட்கள்.. கவனமாக இருக்க வேண்டிய விஷயம்!
Rishabam Rasi Palan: மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.
அந்த வகையில், மே 18 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை, வைகாசி 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷப ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயத்தில் உடனிருப்பவர்களால் ஏதோ ஒரு தவறு நடக்கும். அரசியல்வாதிகள் அதீத கவனமாக இருக்க வேண்டும். கூட இருப்பவர்கள், அலுவலர்கள் எழுதிக் கொடுப்பதை பேசி சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. புத்திசாலித்தனமாக யோசித்து செயல்படுவது நல்லது.
அனுகூலம்
மற்றபடி எல்லா விஷயங்களிலும் நன்மைகள் ஏற்படும் காலகட்டம். உத்தியோகம் ரீதியாக அனுகூலம் காணப்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். வாகனங்களில் செல்லும்போது அதீத கவனமாக இருக்க வேண்டும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அங்கு ஏற்படும் சங்கடங்களை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெளிநாடு யோகம்
துணையிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தொழிலில் அதிக நாட்டம் ஏற்படும். நமக்குத் தேவையான வருமானங்கள் ஏற்படும் காலகட்டம். புதிய தொழில் அமைப்பு, கெளரவம் ஏற்படும். ஏற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் காலகட்டமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும்
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஒற்றை தலைவலி, கண் பாதிப்புகளை பார்த்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத அழுத்தங்களைத் தவிர்ப்பது நல்லது. பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை. பணம், காசுக்கு எந்தவிதமான பிரச்சனைகளும் ஏற்படாது. நரம்பு சம்பந்தபட்ட பிரச்சனைகளில் மிக கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
வழிபாடு
நிலத்தில் முதலீடு செய்யக்கூடிய காலகட்டம். உறவுகளில் பாதிப்புகள் வராமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். பெருமாள் தாயார், அனுமன் வழிபாடு உங்களுக்கு அற்புதமான முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். தினந்தோறும் அனுமன் சாலிஷா கேட்பது, சொல்வது ஏற்றத்தைத் தரும்.
-
ஜூன் 2026 அதிர்ஷ்ட ராசிகள்: குரு, சுக்கிரன், செவ்வாய் அருளால் முன்னேற்றம் காணும் 5 ராசிகள்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications