அமைச்சர் உமாபாரதி உட்பட 53 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்- பதவி இழக்கும் ஆபத்து!
டெல்லி: மத்திய அமைச்சர் உமாபாரதி உட்பட 53 லோக்சபா எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் மீதான வழக்குகளில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் எம்.பி. பதவியை பதவி இழக்க நேரிடும்.
லோக்சபாவில் உள்ள 541 எம்.பி.க்கள், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஜனநாயக சீரமைப்புக்கான அமைப்பு ஆய்வு செய்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் எம்.பி.க்கள் மீதான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 பாஜக எம்.பிக்கள்
லோக்சபாவில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அமைச்சர் உமாபாரதி
இதில் மத்திய அமைச்சர் உமாபாரதி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் அடங்குவர். இவர்கள் மீது பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சிவசேனா
அதற்கு அடுத்து பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவின் 5 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

திரிணாமுல், காங்கிரஸ்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 4 எம்.பி.க்கள், காங்கிரஸ் கட்சியின் 3 எம்.பிக்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன.

அதிமுக
முதல் முறை எம்.பி.யாகி இருக்கும் 23 பேரும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களில் அதிமுகவின் 3 எம்.பிக்களும் அடங்குவர். பாஜகவின் 6, சிவசேனாவின் 4 புதிய எம்.பிக்கள் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.

பப்பு யாதவ்
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் பப்பு யாதவ் மீதுதான் 13 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவரைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பிரதாப்சின்ஹா, மார்க்சிஸ் கட்சியின் கருணாகரன், பிஜூ ஜனதா தளத்தின் ததகடா சத்பதி ஆகியோர் மீது தலா 6 வழக்குகள் உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications