ம.பி. அரசு மருத்துவமனையில் எலி பிடிக்கும் 40 பணியாளார்கள் – 55 லட்சம் நிதி ஒதுக்கீடு!
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இருந்து ஆயிரக்கணக்கான எலிகளை அகற்றும் பணியில் கடந்த இரண்டு நாட்களாக 40 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பெரிய அரசு மருத்துவமனைகளுள் ஒன்றான மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான எலிகள் உள்ளன.
மருத்துவமனை வளாகத்தில் எலிகள் எண்ணிக்கையால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.

எலி பிடிக்க 55 லட்சம்:
அதனையடுத்து, எலிகளை முற்றிலுமாக ஒழிக்க பூச்சி கட்டுபாட்டு நிறுவனத்திடம் ரூபாய் 55 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2500 எலிகள் அகற்றம்:
இதுவரை இந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்து சுமார் 2,500 எலிகள் அகற்றப்பட்டுள்ளன.
மூன்றாவது மாடிக்கு சீல்:
தற்போது மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் எலிகள் பிடிக்கும் பணி நடைபெறுவதால் அந்த தளம் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை முழுதும் எலி வளை:
இந்த பணி தொடர்பாக தெரிவித்த அதிகாரிகள், "இந்த மருத்துவமனை வளாகத்தில் சுமார் 10,000 எலி வளைகள் உள்ளன. ஒவ்வொரு வளையிலும் 4 முதல் 14 எலிகள் வரை இருக்க வாய்ப்புள்ளது. அதன்படி, இந்த அரசு மருத்துவமனையில் 70,000 எலிகள் வரை இருக்கக்கூடும்" எனக் கூறினர்.
விஷம் வைத்துப் பிடிப்பு:
இறால், சமோசா, விஷம் கலந்த நெய் போன்றவற்றை வைத்து எலிகளை பிடித்துவருவதாகவும், எலிகளை பிடித்தவுடன் வளைகளை அடைத்துவிடுவதாகவும் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
டிசம்பர் 4 வரை நீடிக்கும்:
இந்த எலி பிடிக்கும் பணி டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி முடியுமென எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications