டிஜிபிக்கள் 56 வது மாநாடு: சட்ட அமலாக்க ஏஜென்சிகள் செயல்பாட்டை பேசாத பிரதமர்: ப.சிதம்பரம் ஆட்சேபம்
ஆர்யான் கான் வழக்கில் நீதிமன்றம் அளித்த ஜாமீனும், ஆர்யான் கான் கடத்தலில் ஈடுபடவில்லை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டி என்சிபியை கண்டித்ததையும் சுட்டிக்காட்டி, இதுபோன்ற வருந்தத்தக்க நிகழ்வுகளை லக்னோவில் நடந்த டிஜிபிக்கள் மாநாட்டில் நாட்டின் சட்டம் - ஒழுங்கை அமல்படுத்தும் ஏஜென்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஏன் பேசவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
டிஜிபிக்கள் 56 வது மாநாடு
உ.பி மாநிலம் லக்னோவில் டிஜிபிக்கள் மற்றும் ஐஜி-க்களின் 56வது மாநாடு 2 நாட்கள் நடந்தது. அதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இதில் தமிழகத்திலிருந்து டிஜிபி சைலேந்திரபாபு கலந்துக்கொண்டார். காணொளியில் சைபர் பிரிவு ஏடிஜிபி அம்ரேஷ் புஜாரி கலந்துக்கொண்டார்.

பிரதமர் பேச்சு
லக்னோவில் டிஜிபிக்கள் மற்றும் ஐஜிபிக்களின் 56 வது மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய பிரதமர், சாதாரண கீழ்மட்டக் காவல்துறையின் தேவைகளுக்கு எதிர்கால தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சரின் தலைமையில் உயர்-சக்தி காவல் தொழில்நுட்ப துறையை அமைக்க வேண்டும். காவல்துறை தொடர்பான அனைத்து விசாரணைகள், சம்பவங்கள், வழக்குகள் குறித்த விவரங்களையும் பகுப்பாய்வு செய்து, அதை ஒரு கட்டமைக்கப்பட்ட கற்றல் முறையாக மாற்றுவதற்கு ஆய்வுகளை செயல்படுத்த வேண்டும் என்று பேசினார்.
சிதம்பரம் விமர்சனம்
காவல்துறை டிஜிபிக்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் போதை மருந்து வழக்கில் ஆதாரங்கள் ஏதும் இல்லை எனக் கூறி மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அந்த வழக்கில் போதை மருந்து தடுப்பு அமைப்பு (என்சிபி) செயல்பட்டது, இதுபோன்ற வழக்குகளில் என்சிபி போன்ற ஏஜென்சிகள் இளைஞர்கள் மீது குறிவைப்பதேன், இத்தகைய சட்ட அமலாக்க அமைப்புகள், ஏஜென்சிகளின் வருந்தத்தக்க நிகழ்வுகள், செயல்பாடுகள் குறித்து பிரதமர் ஏன் பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சிதம்பரம் டிவிட்டர் பதிவு
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "தேசிய போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றம் செய்யும் நோக்கில் ஆர்யன் கான் குற்றம் செயல்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. ஆர்யன் கானைக் கைது செய்தவுடன் அவர் போதை மருந்து பயன்படுத்தினாரா, இல்லையா என்று ஏன் மருத்துவப் பரிசோதனை நடத்தவில்லை என்று நீதிமன்றம் விமர்சனம் செய்துள்ளது.

ஆதலால் எந்தச் சதியும் இல்லை, எந்தக் குற்றமும் இல்லை, எதற்காக இளைஞர்களை என்சிபி குறிவைக்கிறது? இது திஷா ரவி வழக்கு மீண்டும் வந்ததுபோல் இருக்கிறது. இதுதான் நம்முடைய சட்டம் - ஒழுங்கு அமல்படுத்தும் அமைப்புகளின் நிலை. டிஜிபிக்கள் மாநாட்டில் சட்டம் - ஒழுங்கு அமைப்புகளின் நிலை பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை"
எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications