மும்பையில் 5 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 6 குழந்தைகள் பலி
மும்பை: மும்பை புறநகர் பகுதியான பாந்த்ராவில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 6 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர்.
மும்பையின் கிழக்கு பாந்த்ரா பகுதியில் உள்ள பெஹ்ராம்படாவில் 5 மாடிக் கட்டிடம் ஒன்று இன்று மதியம் இடிந்து அருகிலிருந்த குடிசைப்பகுதியில் சரிந்தது. கட்டிட இடிபாடுகளுக்கிடையே நான்கு முதல் ஐந்து பேர் சிக்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் ஐந்து வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு ஆம்புலன்ஸ்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கட்டிட இடிபாடுகளுக்கிடையில் இருந்து இதுவரை ஒரு பெண், இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் மூன்று பேரை காப்பாற்றியதாகவும், 6 பேர் இறந்து விட்டதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து கட்டிடங்கள் நெருக்கமாக இருப்பதால் மீட்புப் பணிகள் மிகுந்த சவாலாக இருக்கிறது என தீயணைப்பு வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications