சிகப்பழகு தராத சோப்... மம்முட்டி மீது வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ. 30,000 இழப்பீடு
திருவனந்தபுரம்: விளம்பரத்தில் அளித்த உறுதியின் படி சிகப்பழகைத் தரவில்லை என இந்துலேகா நிறுவனம் மற்றும் அதன் விளம்பரத்தில் நடித்த நடிகர் மம்மூட்டி மீது தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
டிவியை ஆன் செய்தாலே இந்த சோப், கிரீமை பயன்படுத்தினால் சிகப்பாகலாம், இதைச் சாப்பிட்டால் ஒல்லியாகலாம், குண்டாகலாம் என சகட்டு மேனிக்கு விளம்பரங்களைப் பார்க்கலாம். ஆனால், அவை அனைத்தும் நிஜத்தில் சாத்தியமா என்பது கேள்விக்குறியே.

இந்நிலையில், தங்களின் சோப்பைப் பயன்படுத்தினால் சிகப்பழகு பெறலாம் என்ற வாசகத்துடன் வெளியான விளம்பரத்திற்கு எதிராக கேரளாவைச் சேர்ந்த சாத்து என்பவர் கடந்தாண்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
சம்பந்தப்பட்ட விளம்பரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். எனவே, அவரையும் தனது வழக்கில் சேர்த்திருந்தார் சாத்து.
இது தொடர்பான தனது மனுவில், ‘மம்முட்டி நடித்த விளம்பர படத்தை நம்பி, இந்துலேகா சோப்பை ஓராண்டாக பயன்படுத்தியதாகவும், ஆனால், விளம்பரத்தில் குறிப்பிட்டது போல் சிகப்பழகு கிடைக்கவில்லை என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். பொய்யான ஒரு வாக்குறுதியை அளித்த இந்துலேகா நிறுவனம் தனக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சாத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியே சாத்துவுடன் சமரசமாக செல்ல இந்துலேகா நிறுவனம் முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சாத்துவுக்கு இந்துலேகா நிறுவனம் ரூ. 30 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கியுள்ளது.
இது தனக்கு கிடைத்த வெற்றி எனக் கூறும் சாத்து, ‘சிகப்பழகு கிடைக்கும் என்பது போன்று பொய் பிரச்சாரம் செய்வதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.
கூடவே, ‘மம்முட்டி போன்ற பிரபல நடிகர்கள், சமூக அக்கறையின்றி இதுபோன்ற சோப் நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடிக்கக் கூடாது' என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications