சீட்டு கட்டாய் சரிந்த 5 மாடி கட்டடம்.. பலி எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு.. குஜராத்தில் பெரும் சோகம்
காந்தி நகர்: குஜராத்தின் சூரத் அருகே 5 மாடிகளை கொண்ட கட்டடம் நேற்று திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் ஏராளமானவர்கள் சிக்கிய நிலையில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் பலர் சிக்கி உள்ளதாக சந்தேகிக்கப்படும் சூழலில் 2வது நாளாக மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என அஞ்சப்படுகிறது.
குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலிகாம் என்ற பகுதி உள்ளது. இங்கு டிஎன் நகர் எனும் இடத்தில் அடுக்குமாடி கட்டடங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்துடன் இந்த அடுக்குமாடி கட்டங்களில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் நேற்று தரைதளம் + 5 மாடிகளை கொண்ட கட்டடம் திடீரென்று இடிந்து விழுந்தது. நேற்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் இந்த கட்டடம் சீட்டு கட்டுபோல் சரிந்து விழுந்தது. கட்டடத்தில் வசித்தவர்கள் இடிபாடுகளுக்கும் சிக்கி கொண்டனர். அதாவது அந்த பகுதியில் உள்ள ஜவுளி பணியாளர்கள் தங்களின் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் அவர்கள் தான் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர்.
இந்த கட்டடம் இடிந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசார், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியை தொடங்கினர். அதுமட்டுமின்றி மாநில தேசிய பேரிடர் மீட்பு படையினர், தேசிய மீட்பு படையினரும் வரழைக்கப்பட்டனர். இவர்களும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த மீட்பு பணியின் காரணமாக 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் 25 வயது நிரம்பிய நபரின் உடல் மீட்கப்பட்டது. மேலும் நேற்று இரவு, இன்று காலை என்று தொடர்ந்து 2வது நாளாக மீட்பு பணி நடந்து வரும் நிலையில் மேலும் 6 பேரின் உடல் மீட்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது. இன்னும் 6 முதல் 7 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இவர்களை மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுபற்றி சூரத் தீயணைப்பு பிரிவு தலைமை அதிகாரி பேசன்ட் பரிக் கூறுகையில், ‛‛மீட்பு பணி இரவு முழுவதும் நடந்தது. தற்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது. 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் 6 முதல் 7 பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. மீட்பு பணியில் எங்களுடன் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சேர்ந்து உள்ளனர்'' என்றார்.
இதுபற்றி சூரத் போலீஸ் துணை ஆணையர் ராஜேஷ் பர்மார் கூறுகையில், ‛‛இடிந்து விழுந்த கட்டடத்தின் ஒவ்வொரு மாடியிலும் 5 முதல் 6 வீடுகள் இருந்துள்ளன. இதில் சில வீடுகளில் மட்டுமே மக்கள் இருந்துள்ளனர். இந்த வீடுகளில் சச்சின் ஜிஐடிசி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் நபர்களின் குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. பல வீடுகள் காலியாக இருந்துள்ளன. தற்போது மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது'' என்றார்.
இதற்கிடையே தான் இந்த கட்டடம் இடிந்தது எப்படி? என்பது பற்றிய விசாரணை தொடங்கி உள்ளது. அதாவது தற்போது இடிந்து விழுந்த கட்டடம் என்பது 2016-2017 ம் ஆண்டில் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக அந்த பகுதியில் மழை பெய்தது. இதனால் மழையின் காரணமாக அந்த கட்டடம் இடிந்து விழுந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications