“திக் திக்”.. ஜம்மு காஷ்மீரில் நேர்ந்த துயரம்! மலை பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 7 பேர் பரிதாப பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மலை உச்சியிலிருந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகி இருக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீரின் கத்ராவை நோக்கி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து ஏராளமான பயணிகளுடன் ஒரு பேருந்து சென்றுகொண்டு இருந்தது. இந்த பேருந்து ஜம்மு மாவட்டம் கத்ராவில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜஜ்ஜார் கோட்லி அருகே சென்று கொண்டு இருந்தபோது மலையில் இருந்து ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது.
மலை பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் போலீசார் அப்பகுதியில் மீட்புப் பணிக்கு உதவி வருகிறார்கள். ஆம்புலன்ஸுகள் அழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்துக்குள்ளான பேருந்துக்கு அடியில் வேறு யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பதை கண்டறிய கிரேன் ஒன்றும் வரவழைக்கப்பட்டு உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவதாகவும், பேருந்தில் பயணித்தவர்கள் அனைவரும் பீகாரை சேர்ந்தவர்கள் என்றும், சிஆர்பிஎப் உதவி ஆணையர் அசோக் சவுதாரி தெரிவித்து உள்ளார்.
அவர்கள் வழிமாறி சென்று இந்த விபத்தில் சிக்கி உள்ளதாக அவர் கூறி உள்ளார். இந்த கோர விபத்தில் சிக்கி 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஜம்மு துணை ஆணையர் ஆவ்னி லவாசா தெரிவிக்கையில், "இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். 12 பேர் ஜஜ்ஜார் கோட்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்." என்றார்.
இதுகுறித்து ஜம்மு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அளித்து இருக்கும் விளக்கத்தில், "ரேசாய் மாவட்டம் கத்ரா நோக்கி சென்றுகொண்டு இருந்து அமிர்தசரசில் இருந்து வந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. 12 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications