ஷியோக் ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்த ராணுவ வாகனம்.. 7 வீரர்கள் பலி, பலர் படுகாயம்! நடந்தது என்ன
ஸ்ரீநகர்: காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் சென்ற வாகனம் ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியப் பாகிஸ்தான் எல்லையில் எப்போதும் பரபரப்பாக உள்ள இடம் என்றால் காஷ்மீர் தான். அதிலும் கடந்த சில மாதங்களாகவே அங்குப் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி அதிகரித்து வரும் நிலையில், காஷ்மீரில் ராணுவத்தினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே காஷ்மீரில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்திற்கு உள்ளாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீரின் லடாக்கில் உள்ள ஷியோக் ஆற்றின் அருகே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்தில் சிக்கி உள்ளது.
இந்த விபத்தில் 7 வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. மற்ற காயமடைந்த வீரர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து இந்திய ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "26 வீரர்கள் கொண்ட ஒரு குழு பார்தாபூரில் உள்ள முகாமில் இருந்து ஹனிஃபில் என்ற பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது தோய்ஸ் பகுதியில் இருந்து 25 கிமீ தொலைவில் வாகனம் சென்று கொண்டிருந்த போது, காலை 9 மணியளவில் வாகனம் எதிர்பாராத விதமாக ஷியோக் ஆற்றில் கவிழ்ந்தது.
சுமார் 50 முதல் 60 அடி ஆழம் கொண்ட இந்த ஆற்றில் வாகனம் கவிழ்ந்ததில் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டன. மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு, அனைத்து வீரர்களும் பார்த்தபூரில் உள்ள கள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்குச் சிறப்பான மருத்துவச் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு மேற்சிகிச்சை அளிக்க விமானப் படையிடம் இருந்து விமானங்களும் கோரப்பட்டுள்ளது" என்றார்.

இதனிடையே இந்த விபத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "லடாக்கில் பேருந்து விபத்துக்குள்ளானதில் நமது துணிச்சலான ராணுவ வீரர்களை இழந்துள்ளோம். என் எண்ணங்கள் எல்லாம் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications