7-வது ஊதிய பரிந்துரை: முதற்கட்டமாக அடிப்படை ஊதியத்தில் 14.29 % உயர்வு குறித்து அறிவிப்பு வெளியீடு
டெல்லி: 7-வது ஊதிய பரிந்துரையில் முதல்கட்டமாக அடிப்படை ஊதியத்தில் 14.29 சதவீத உயர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியம் மற்றும் அனைத்து படிகளையும் சேர்த்து 23.5 சதத ஊதிய உயர்வு வழங்க 7-வது ஊதிய குழு பரிந்துரை செய்திருந்தது.. இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது. கடந்த ஜனவரி முதல் முன் தேதியிட்டு ஊதிய உயர்வு அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அடிப்படை ஊதியம் மீதான உயர்வை மட்டும் உடனடியாக அளிக்க மத்திய அரசு ஒப்பு கொண்டுள்ளது. மேலும், வீட்டு வாடகை உள்ளிட்ட இதர படிகள் மீதான சுமார் 9.5 சதவீத உயர்வு குறித்து நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்ய உள்ளது. அந்த குழு 4 மாதங்களில் அறிக்கை அளிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடிப்படை ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பாணையை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாத சம்பளத்தில் ஊதிய உயர்வு அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வுதியதாரர்களும் பயனடைவார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications