டெல்லியில் பெண்களுக்கு மட்டுமல்ல.. வாகனங்களுக்கும் கூட பாதுகாப்பு இல்லையே!
டெல்லி: டெல்லியில் பெண்களுக்கும், அவர்களது கற்புக்கும்தான் பாதுகாப்பு இல்லை என்பார்கள் பொதுவாக. ஆனால் இங்கு வாகனங்களுக்கும் கூட பாதுகாப்பு இல்லை. தினசரி 84 ஆட்டோ திருட்டு வழக்குகள் பதிவாகிறதாம் அங்கு.
ஆட்டோக்கள் என்று இல்லை, பல வகையான வாகனங்களும் அங்கு சரமாரியாக திருடப்படுகிறதாம். பார்க்கிங் பகுதிகள் பலவற்றில் சிசிடிவி கண்காணிப்பு இல்லாததே இதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் எந்த வாகனத்தையும் பொது இடத்தில் நம்பி நிறுத்திச் செல்ல முடியாது என்ற அளவுக்கு திருடர்களின் அட்டகாசம் உள்ளதாம்.

21,417 திருட்டு வழக்கு...
இந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 21,417 வாகனத் திருட்டு புகார்கள் டெல்லி காவல்துறைக்கு வந்துள்ளதாம்.

கடந்த வருடத்தை விட மோசம்...
இது கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 15,530 திருட்டுப் புகார்களாக இருந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு படு மோசம் என்ற நிலை மக்களையும், காவல்துறையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

38 சதவீதம் அதிகரிப்பு...
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 38 சதவீத அளவுக்கு வாகனத் திருட்டு அதிகரித்திருப்பது திருடர்கள் எந்த அளவுக்கு "உற்சாகமாக பணியாற்றுகிறார்கள்" என்பதைக் காட்டுவதாக உள்ளது.

தினசரி 84 வாகனங்கள் திருட்டு...
தினசரி சராசரியாக 84 வாகனங்கள் டெல்லியில் திருடப்படுகிறதாம். இது கடந்த ஆண்டு 64 ஆக இருந்தது.

2012, 13 பரவாயில்லை...
அதேசமயம், 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் இது 40 வாகனங்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆண்டுகளை விட சமீப ஆண்டுகளில் திருட்டு அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது.

3 ஆண்டுகளில் 75 சதவீதம் அதிகரிப்பு...
கடந்த 3 ஆண்டுகளில் ஒப்பிட்டுப் பார்த்தால் வாகனத் திருட்டுக்களின் அளவு 75 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல மாநிலத் திருடர்கள்...
டெல்லியில் வாகனத் திருட்டில் ஈடுபடுவது அக்கம் பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்த கும்பல்கள்தான். அதாவது ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்தான். இங்கு திருடி அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் விற்று விடுவார்களாம்.

பிரித்து விற்கிறார்கள்...
திருடப்பட்ட வாகனங்களை அப்படியே விற்பதில்லையாம். மாறாக ஸ்பேர் பார்ட்க்ளைப் பிரித்து விற்று விடுவார்களாம். இதனால் திருட்டுப் போன வாகனத்தைக் கண்டுபிடிப்பது மிக மிக கடினம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications