மகாராஷ்டிராவில் இருந்து ஹரித்துவாருக்கு ரயிலில் திரும்பிய 87 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஹரித்துவார்: மகாராஷ்டிராவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஹரித்துவார் திரும்பிய 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து பிற மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் செல்வோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாவதற்கும் மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவர்கள்தான் காரணம். இதேபோல் கர்நாடகாவிலும் மகாராஷ்டிராவில் இருந்து திரும்பியவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் பரிதவித்தவர்கள் ஹரித்துவாருக்கு சிறப்பு ரயில் மூலம் சென்றடைந்தனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் முதலில் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பின்னர் மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மொத்தம் 1,500 பயணிகள் மகாராஷ்டிராவில் இருந்து வந்ததால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கூட வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் உத்தரகாண்ட் மாநில அதிகாரிகள்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications