370-வது ரத்துக்குப் பின் முதல் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்.. 909 பேர் வேட்பாளர்களாக போட்டி!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது சட்டசபை தேர்தலில் மொத்தம் 909 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தல். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு சட்டசபை பதவிக் காலம் 5 ஆண்டுகள் மட்டுமே என மாற்றப்பட்ட பின்னரான முதலாவது தேர்தல் இது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 90 தொகுதிகளுக்கும் 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் செப்டம்பர் 18, 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25, 3-வது கட்ட தேர்தல் அக்டோபர் 1-ந் தேதி நடைபெறும். 3 கட்ட வாக்குகளும் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது 2019-ல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. அத்துடன் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவும் ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் சட்டசபை உண்டு. லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை இல்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த போது சட்டசபை பதவிக் காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. 2019-ல் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பின்னர் சட்டசபை பதவிக் காலம், இதர மாநிலங்களைப் போலவே 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 5 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவிலை. 2014-ம் ஆண்டுதான் ஜம்மு காஷ்மீரில் கடைசியாக தேர்தல் நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து தற்போது தேர்தல் நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, பயங்கரவாதிகளுக்கு உதவியதால் கைது செய்யப்பட்ட பொறியாளர் ரஷீத் கட்சி உள்ளிட்டவை களத்தில் உள்ளன. ஜம்மு காஷ்மீர் தேர்தலில் போட்டியிட 1127 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இவற்றில் 164 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 54 பேர் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனையடுத்து. 909 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.
முதல் கட்ட தேர்தல் 24 தொகுதிகளில் செப்டம்பர் 18-ந் தேதி நடைபெறுகிறது. காஷ்மீர் பிராந்தியத்தில் 16, ஜம்மு பிராந்தியத்தில் 8 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 219 பேர் வேட்பாளர்கள்.
2-வது கட்ட தேர்தல் 26 தொகுதிகளில் செப்டம்பர் 25-ந் தேதி நடைபெறுகிறது. 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 240 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.
3-வது கட்ட தேர்தல் எஞ்சிய 40 தொகுதிகளில் அக்டோபர் 1-ந் தேதி நடைபெறும். 3-வது கட்ட தேர்தலில் மொத்தம் 450 பேர் வேட்பாளர்கள்.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் களமானது 370-வது பிரிவு ரத்தை மையமாகக் கொண்டதாக உருவெடுத்துள்ளது. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை பாஜக நியாயப்படுத்துகிறது. ஆனால் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்; அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர நெருக்கடி தருவோம் என்கிறது காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications