பெங்களூரில் கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழப்பு
பெங்களூரு கட்டட விபத்தில் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழந்தது.
பெங்களூரு: சிலிண்டர் வெடித்ததால் இடிந்து விழுந்த கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழந்தது.
பெங்களூரு எஜிபுராவில் கடந்த திங்கள் கிழமை சிலிண்டர் வெடித்ததில் 2 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் கட்டட இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய 3 வயது குழந்தை சஞ்செனா உயிருடன் மீட்கப்பட்டது. ஆனால் குழந்தையின் பெற்றோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
3 மணி நேரங்கள் டன் கணக்கில் குவிந்த கட்டட இடிபாடுகளை மீட்புக் குழுவினர் கனரக எந்திரங்கள் கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது இடிபாடுகளிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.
தீயணைப்புப் படையினரும், அவசரநிலை சேவைகள் அதிகாரிகளும் இடிபாடுகளை அகற்றி சஞ்சனா என்ற அந்த 3 வயதுக் குழந்தையை மீட்டனர். காயங்களுடன் மீட்கப்பட்ட சஞ்செனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் குழந்தையின் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் குழந்தை உயிரிழந்துவிட்டது. குழந்தையின் பெற்றோர் இறந்துவிட்டதால் குழந்தையை கர்நாடக அரசே தத்தெடுத்து வளர்க்கும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Blast Day 1 Collection: அர்ஜுனின் பிளாஸ்ட் படத்திற்கு முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications