கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் – பாஜக பெண் வேட்பாளர் மீது தாக்குதல் என புகார்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாஜக வேட்பாளரை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
கொல்கத்தா மாநகராட்சிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது144 வார்டுகளுக்கான வாக்கு பதிவானது இன்று நடைபெற்று வருகிறது.மாநகராட்சி முழுவதும் 23 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகராட்சியில் தங்கள் பலத்தை நிரூபிக்க பாஜக திரிணமுல் காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இருந்தபோதும் பல இடங்களில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிர்டஸ் கட்சியினரிடையே மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன

பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்
இந்த நிலையில் பாரதிய ஜனதா வேட்பாளர் ஒருவரை திரிணமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது மீனா தேவி புரோகித் என்பவர் 22 வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவரை அங்கிருந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது , வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டருக்கு உள்ளே யாரும் அனுமதிக்கக் கூடாது என்ற விதி உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளே புகுந்து அராஜகம் செய்வதாகவும் இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள்
ஐந்து முறை கவுன்சிலராக இருந்த மீனா, திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வெளியாட்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வருவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது தன்னை தாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தலை நியாயமான முறையில் நடத்தவிடாமல் தடுப்பதாகவும், அராஜகத்தை கையாண்டு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாக்குதல் என பொய்புகார்
இந்த நிலையில் அதே வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான பிரியங்கா தேப்நாத் பிரச்சினை நடந்தபோது மீனா தன்னை அறைந்ததாகவும், அனுதாப வாக்குகளைப் பெற முயற்சிப்பதற்காக மீனா தனது ஆடையை தானே கிழித்து பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளார்.

மாநகராட்சி பகுதிகளில் பரபரப்பு
பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டதாக தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து ஏராளமான பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலிசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜகவினருக்கு இணையாக திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும் அங்கு கூடியதால் மோதல் ஏற்படும் நிலை உருவானது. இதனால் அங்கு உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications