குஜராத்தில் உலாவும் ’ரோலக்ஸ்’ 'BREAKING BAD' பாணியில் போதை பொருள் தயாரிப்பு! சிக்கியது இப்படி தான்!
அகமதாபாத்: போதைப் பொருள் கடத்தலை மையமாகக் கொண்டு வெளியான டிவி தொடரான 'பிரேக்கிங் பேட்' பாணியில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நவீன உபகரணங்களுடன் செயல்பட்டு வந்த போதைப் பொருள் தயாரிப்பு ஆலையானது சிக்கி இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருட்களை கடத்தி வந்து போதை பொருளாக மாற்றி கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்த ரோலக்ஸ் யார் என விசாரித்து வருகின்றனர் காவல்துறையினர்.
கடந்த சில நாட்களாக அதிக அளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக குஜராத் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடல் வழியாக போதை பொருட்கள் அதிக அளவில் கடத்தி வரப்படுவது தெரிய வந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் கடத்தில் வழக்கில் சிக்கியது பேசு பொருளானது
போதைப்பொருள் ஆலை: இந்த நிலையில் குஜராத்தில் போதைப்பொருள் ஆலை ஒன்றை கண்டுபிடித்து இருக்கின்றனர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் காவல் துறையினர். ஆபரேஷன் பிரயோக்சாலா-1 என்ற பெயரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் குஜராத் காவல் துறையினர் நடத்திய ஆய்வில் மெப் (மெபட்ரோன்) என்ற போதை பொருளை தயாரித்த ஆலையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 149 கிலோ மெபட்ரோன் பவுடராகவும் திரவ வடிவிலும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் 50 கிலோ எபிட்ரின் 200 லிட்டர் அசொட்டோன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.
அதிர்ச்சி சம்பவம்: இவற்றின் மொத்த மதிப்பு 300 கோடிக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதில் மூளையாக செயல்பட்ட 'ரோலக்ஸ்' யார்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் பேசியபோது 'பிரேக்கிங் பேட்' தொடரில் வருவது போல ஆலை செயல்பட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது என கூறினர்.
பிரேக்கிங் பேட்: 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை 'ப்ரேக்கிங் பேட்' என்ற பெயரில் போதை பொருள் கடத்தலை மையமாக வைத்து டிவி தொடராக வெளிவந்தது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற இந்த சீரிஸில் மெத் என்ற மெத்தபெட்டமைன் போதை பொருள் பற்றி விரிவாக கூறப்பட்டிருக்கும். தற்போது சிக்கி இருக்கும் மெபட்ரோன் அதே வகையைச் சேர்ந்த போதைப் பொருள்தான். வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பெயர்களில் கடத்தி வரப்படும் மூலப் பொருளானது இந்தியாவில் போதைப் பொருளாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
வெளிநாடுகளுக்கு கடத்தல்: குறிப்பாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு இவை ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. மெபட்ரோன்-க்கு உலக அளவில் கடுமையான டிமாண்ட் நிலவுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் ஒரு கிலோ ஒன்றரை கோடி வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மூலப்பொருட்களை கடல் வழியாக கடத்தி வந்து இந்தியாவில் அதனை போதை பொருளாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு உள்நாடுகளிலும் விற்பனை நடைபெறுகிறது.
அதிர்ச்சி தகவல்கள்: இந்த மெபட்ரோன் போதை பொருளை அதிக அளவில் பயன்படுத்தும்போது நரம்பு மண்டல பாதிப்பு நாளடைவில் மூளை பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு இருக்கலாம் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். தமிழகத்தில் போதை பொருள் வழக்கு பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்திலேயே அதிகளவிலான போதை பொருள்களுடன் ஆலை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. வரும் காலங்களில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
சிக்கியது எப்படி?: இந்த நிலையில் இவ்வளவு பெரிய போதைப்பொருள் தயாரிப்பு ஆலை சிக்கியது எப்படி என்பது குறித்தான தகவல்களும் வெளிவந்திருக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று சிக்கியது. அவர்கள் உள்ளூரில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்து வந்தனர். இது தொடர்பாக கிடைத்த தகவலையடுத்து குறிப்பிட்ட போதை பொருள் விற்பனை கும்பலை குஜராத் காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்துடன் தொடர்பு?: அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குஜராத்திலேயே தயாரிக்கப்படும் போதை பொருட்களை மொத்தமாக வாங்கி கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் ஐடி ஊழியர்களுக்கு கிராம் ஆயிரம் ரூபாய் என்று அளவில் விற்பனை செய்தது தெரியவந்தது. அதனை அடிப்படையாக வைத்து தேடுதல் வேட்டையை தீவிர படுத்திய காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருடன் இணைந்து இந்த ஆலையை கண்டுபிடித்திருப்பது தெரிய வந்துள்ளது. பல ஆண்டுகளாக இவர்கள் போதைப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்ததும் வெளிநாடுகளுக்கு கடத்தி வந்ததும் தெரிய வந்தது. மேலும் ஏற்கனவே சிக்கிய தமிழக போதை பொருள் கடத்தல் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications