பாக். உளவு அமைப்பிடம் இருந்து பாஜக, பஜ்ரங்தள் நிதி உதவி பெற்றதா? திக்விஜய்சிங் பேச்சால் பரபரப்பு
போபால்: பாகிஸ்தான் உளவு அமைப்பிடம் இருந்து பாஜக மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகள் நிதி உதவி பெற்றதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் பிந்த் என்ற இடத்தில் நேற்று செய்தியாளர்களை திக்விஜய்சிங் சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானின் ஐ.எஸ் உளவு அமைப்பிடம் இருந்து பஜ்ரங் தள் மற்றும் பாஜக ஆகியவை பணம் பெறுகின்றன. இந்த நாட்டில் முஸ்லிம்களை விட முஸ்லிம்கள் அல்லாதவர்கள்தான் பாகிஸ்தானுக்காக உளவு பார்க்கின்றனர் என கூறியிருந்தார்.

திக்விஜய்சிங்கின் இக்கருத்துக்கு பாஜக, பஜ்ரங் தள் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து திக்விஜய்சிங் இன்று விளக்கம் தெரிவித்துள்ளார்.
அதில், மத்திய பிரதேசத்தில் பாகிஸ்தானுக்கு வேவு பார்த்ததாக பஜ்ரங் தள் மற்றும் பாஜக ஐடி விங் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில்தான் கருத்து தெரிவித்திருந்தேன்.
இதுபற்றி பாஜகவிடம் டிவி சேனல்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு ட்விட்டர் பதிவில், பாஜகவின் ஐஎஸ் அமைப்பிடம் பணம் பெற்றுக் கொன்டு பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதாக சில டிவி சேனல்கள் கூறிவருகின்றன. இது முற்றிலும் தவறானது எனவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications