அதிர்ச்சி.. திருமண கிஃப்ட் வெடித்து, மாப்பிள்ளை, பாட்டி பலி.. மணப்பெண் படுகாயம்!
ஒடிசாவில் திருமண கிஃப்ட் வெடித்து சிதறியதில் மணமகன் மற்றும் அவரது பாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
Recommended Video

பொலிங்கர்: ஒடிசாவில் திருமண கிஃப்ட் வெடித்து சிதறியதில் மணமகன் மற்றும் அவரது பாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒடிசா மாநிலம் பொலிங்கர் மாவட்டம் பட்நாகர் நகரை சேர்ந்தவர் சவுமியா சேகர் சாஹு என்பவருக்கு ரீமா சாஹு என்ற பெண்ணுடன் கடந்த 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இதையடுத்த கடந்த புதன்கிழமை மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமக்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு பரிசு பொருட்களை வழங்கினர்.

வெடித்த சிதறிய கிஃப்ட்
இந்நிலையில் ரிசெப்ஷனில் வழங்கப்பட்ட பரிசு பொருட்களை உறவினர்களுடன் சேர்ந்து புதுமண தம்பதியர் நேற்று பிரித்து பார்த்தனர். அப்போது ஒரு பரிசு பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

மாப்பிள்ளை பலி
இதில் மாப்பிள்ளையின் பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த புது மாப்பிள்ளை சவுமியா சேகர் சாஹு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை
பலத்த காயமடைந்த புதுமணப் பெண் ரீமா சாஹு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து பரிசு பொருளில் வெடிகுண்டு வைத்தவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.

பெரும் அதிர்ச்சி
மேலும் எதற்காக பரிசு பொருளில் வெடிகுண்டு வைக்கப்பட்டது என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமண கிஃப்ட்டில் இருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் புதுமாப்பிள்ளையும் அவரது பாட்டியும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications