அம்மாகணக்கு படம் போல மகனுடன் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய தாய்! பஞ்சாப்பில் நெகிழ்ச்சி!
பஞ்சாப்பில் தனது மகனுடன் சேர்ந்து தாய் ஒருவர் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

லுதியானா: பஞ்சாப்பில் தனது மகனுடன் சேர்ந்து தாய் ஒருவர் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி கற்க தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. 90 வயதுக்கு மேல் பட்டம் பெற்றவர்கள் உண்டு.
அந்த வகையில் பஞ்சாப்பில் தாய் ஒருவர் தனது மகனுடன் சேர்ந்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளார். அவரது தன்னம்பிக்கையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

1989ல் 9ஆம் வகுப்பு
பஞ்சாப் மாநிலம் லுதியானா பகுதியைச் சேர்ந்தவர் ரஜினிபாலா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் 1989 ஆம் ஆண்டு தனது 9 ஆம் வகுப்பை முடித்தார்.

44வயதான ரஜினிபாலா
குடும்ப சூழ்நிலையால் ரஜினிபாலாவால் தனது படிப்பை தொடர முடியாமல் போனது. தற்போது 44 வயதான ரஜினிபாலாவுக்கு 10 ஆம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவன் உள்ளான்.

கணவரின் அறிவுறுத்தல்
இந்நிலையில் கல்வியை தொடருமாறு ரஜினிபாலாவின் கணவர் தொடர்ந்து அவரை அறிவுறுத்தி வந்துள்ளார். கணவரின் தொடர் அறிவுறுத்தலால் 10ம் வகுப்பு தேர்வெழுத மீண்டும் கல்வியை தொடர்ந்தார் ரஜினிபாலா.

மகனுடன் தேர்வு
மகனுடன் ஒன்றாக பள்ளிக்கு சென்றதுடன் டியூசனுக்கும் ஒன்றாகவே சென்று படித்தார் அவர். மகனுடன் ஒன்றாக படித்த அவர் மகனுடனேயே சேர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வையும் எழுதியுள்ளார்.

கணவருக்கு பாராட்டு
கல்விக்கு வயது ஒன்றும் தடையல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக ரஜினிபாலா சுமார் 29 வருடங்களுக்குப் பிறகு 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். மனைவியை தொடர்ந்து கல்வி கற்க அறிவுறுத்தி வெற்றி பெற்ற ரஜினிபாலாவின் கணவரும் மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications