2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை
2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

டெல்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்பை நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த திமுக தொண்டர்கள் வெடி வெடித்துக்கும் முழக்கமிட்டும் கொண்டாடி வருகின்றனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பை வழங்கினார்.
அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பை நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் உற்று நோக்கி வந்தனர்.

சுப்பிரமணிய சாமி வருகை
இந்த வழக்கில் தொடர்புடைய ஆ ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கை தொடர்ந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

அழகிரியும் வந்தார்
இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, கனிமொழி மற்றும் கனிமொழியின் தாயார் ராஜாத்தியம்மாள் ஆகியோர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். கனிமொழியுடன் அவரது சகோதரரான அழகிரியும் நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர்.

கனிமொழியின் கணவர்
டிஆர் பாலு, திருச்சி சிவா, துரைமுருகன் உள்ளிட்டோரும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர். கனிமொழியின் கணவர் அரவிந்தன் மற்றும் பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர்.

நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
2ஜி வழக்கில் முக்கிய தீர்ப்பை முன்னிட்டு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டது. காலை முதலே நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவி வந்தது.

போதுமான ஆதாரங்கள் இல்லை
இந்நிலையில் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறி நீதிபதி சைனி குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி, ஆ ராசா உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி சிபிஐ நிரூபிக்க தவறிவிட்டதாகவும் நீதிபதி சைனி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications