2ஜி வழக்கில் சில மணி நேரத்தில் தீர்ப்பு.. டெல்லியில் திரண்ட ஆ. ராசா, கனிமொழி ஆதரவாளர்கள்!

2ஜி வழக்கில் சில மணி நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மற்றும் எம்பி கனிமொழியின் வீடுகளின் முன்பு ஏராளமான ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2ஜி வழக்கில் சில மணி நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மற்றும் எம்பி கனிமொழியின் வீடுகளின் முன்பு ஏராளமான ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய '2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் டெல்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது.

A Rasa and Kanimozhi supporters deployed in Delhi due to 2G case verdict

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது தி.மு.க,வைச் சேர்ந்த ஆ. ராசா தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். அப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில், 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அலுவலக அறிக்கை தெரிவித்தது.

இது தொடர்பாக, சி.பி.ஐ., இரு வழக்குகளையும், அமலாக்கத் துறை ஒரு வழக்கையும் தொடர்ந்தன. கடந்த, 10 ஆண்டுகளாக இந்த வழக்குகளை விசாரித்த டெல்லி, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.ஷைனி, இன்று தீர்ப்பு அளிப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, ராஜ்யசபா எம்பி கனிமொழி உள்ளிட்டோர் ஆஜராக டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து டெல்லியில் கனிமொழி மற்றும் ஆ ராசாவின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+