கவிதாபூர் ஆகப்போகும் கானாபூர் கிராமம்: கவிதா யார் என தெரியும்ல!

Subscribe to Oneindia Tamil

நிஜாமாபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், எம்.பி.யுமான கவிதாவின் பெயரை தங்கள் கிராமத்திற்கு வைக்க முடிவு செய்துள்ளனர் கானாபூர் மக்கள்.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ளது கானாபூர் கிராமம். கோதாவரி ஆற்றங்கரையோரம் மேற்கொண்ட ஸ்ரீராம்சாகர் திட்டத்தால் கானாபூர் கிராமம் நீரில் மூழ்கியது.

A village in Telangana to be named after KCR's daughter

இதனால் கானாபூர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த கிராமத்தினரின் மறுவாழ்வுக்கு தான் உதவி செய்வதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், எம்.பி.யுமான கவிதா தெரிவித்துள்ளார்.

கானாபூர் கிராம மக்களுக்கு 274 வீடுகள் கட்டித் தரப்படும் என கவிதா உறுதியளித்துள்ளார். கவிதாவின் இந்த செயலை அடுத்து கானாபூரின் பெயரை கவிதாபூர் என மாற்ற கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கானாபூர் கிராம மக்களுக்கு அர்மூர் எம்.எல்.ஏ. ஜீவன் ரெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+