சாமியார் ராம்பால் ஆசிரம வன்முறையில் சிக்கிய 2 பேர் பலி- சிகிச்சை பெற்ற தாய்-மகள் உயிரிழப்பு!!
ஹிசார்: சர்ச்சை சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் அவரது ஆயுதம் தாங்கிய குண்டர் படைக்கும் போலீசாருக்கும் இடையேயான மோதலில் சிக்கியோரில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஹரியானாவில் நீதிமன்ற உத்தரவுப்படி சாமியார் ராம்பாலை கைது செய்ய போலீசார் நேற்று முயற்சித்தனர். ஆனால் சாமியாரின் சீடர்கள் என்கிற ஆயும் தாங்கிய குண்டர்படை போலீசார் மீது கொடூர தாக்குதலை நடத்தியது.

துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் வன்முறையாட்டம் போட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்தனர். போலீசாரும் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என முயற்சித்தனர். பின்னர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் ஆசிரமத்தின் ஒரு பகுதியை இடித்து உள்ளே நுழைந்து ராம்பாலை போலீசார் தேடினர். ஆனால் அவர் சிக்கவில்லை.
இந்த வன்முறையில் சிக்கி படுகாயமடைந்த தாய் மற்றும் 5 வயது மகள் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஹிசார் வன்முறையில் பலி எண்ணிக்கை 2 ஆகியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications