For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ் இன்பார்மர்.. கேரள- தமிழக எல்லையில் சுட்டு கொல்லப்பட்ட பெண்.. 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!

Google Oneindia Tamil News

இடுக்கி: உடுமலைப்பேட்டை அருகே தமிழக- கேரளா எல்லையில் இளம்பெண் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    COVID வந்தால் Rs.50,000 Cashback! Keralaவில் வினோத விளம்பரம்

    ஆணைமலை, பழனி மலை அருகே கேரள எல்லையில் இருக்கும் மறையூர் பகுதியில் அதிக அளவில் சந்தன மரங்கள் உள்ளது. இங்கு அடிக்கடி சந்தன கடத்தல் நடப்பதாக புகார் வந்ததை அடுத்து போலீசாரும், வனத்துறையும் இங்கு சோதனை நடத்தி வருகிறார்கள்.

    சந்தன கடத்தல் குறித்து போலீசிடம் புகார் அளிப்பதற்காக இங்கு உள்ளூர் மக்களை போலீசார் இன்பார்மர்களாக வைத்து உள்ளனர்.

    கேரளா பாஜக எம்பியின் தாய் கொரோனாவால் இறக்கவும் இல்லை- விதிகள் மீறலும் இல்லை- பரவியது பொய் செய்தி! கேரளா பாஜக எம்பியின் தாய் கொரோனாவால் இறக்கவும் இல்லை- விதிகள் மீறலும் இல்லை- பரவியது பொய் செய்தி!

    கொலை நடந்தது

    கொலை நடந்தது

    இந்த நிலையில் மறையூர் பகுதியில் சந்தன கடத்தலில் ஈடுப்பட்டு வந்த காளியப்பன் என்ற நபர், அவரின் உறவினர் சந்திரிகா என்பவரை சுட்டுக் கொலை செய்துள்ளார். இந்த காளியப்பனுக்கு எதிராக போலீசில் சந்தன கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. காளியப்பன் ஜெயிலுக்கு சென்று பெயிலில் திரும்பி இருக்கிறார். அப்போதுதான் இந்த கொலை நடந்துள்ளது.

    சந்திரிகா ஏன்

    சந்திரிகா ஏன்

    சந்திரிகாதான் போலீசிடம் தன்னை பற்றி தகவல் கொடுத்தது. அவர் சொன்ன தகவலை கேட்டுதான் போலீசார், தன்னை கைது செய்தனர் என்று காளியப்பன் சந்தேகம் கொண்டுள்ளார். சந்திரிகா போலீஸ் இன்பார்மராக இருக்க வாய்ப்புள்ளது என்று காளியப்பன் நினைத்துள்ளார். இது தொடர்பாக சந்திரிகாவிடம் விசாரிக்க சென்று காளியப்பன், அவரிடம் சண்டை போட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    கொலை செய்தார்

    கொலை செய்தார்

    காளியப்பன் உடன் அவரின் கூட்டாளிகள் இரண்டு பேர் உடன் சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் மைனர்கள். இவர்கள் மூவரும் சேர்ந்து சந்திரிகாவிடம் சண்டை போட்டு உள்ளனர். ஏன் போலீசிடம் எங்களை பற்றி தகவல் கொடுத்தாய் என்று கேட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றவே கடைசியில் சந்திரிகாவை அங்கேயே நாட்டு துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்கள்.

    மரணம்

    மரணம்

    இதில் சந்திரிகா சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த இடத்தில் இருந்து மூன்று பேரும் தப்பித்து ஓட முயன்று இருக்கிறார்கள். அப்போது ஊர் மக்கள் காளியப்பனை சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காளியப்பனையும் அவரின் இரண்டு மைனர் கூட்டாளிகளையும் கைது செய்தனர்.

    English summary
    A woman murdered in Kerala - TN border for being a police informer in sandalwood smuggling case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X