2.5 வருடமாக வன்புணர்வு செய்யப்பட்டேன்.. பெண் ஊழியரின் புகார்.. டெல்லி அரசு அலுவலகத்தில் நடந்த அவலம்
டெல்லி வளர்ச்சி மேம்பாட்டு ஆணையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் தான் 2.5 வருடமாக வன்புணர்வு செய்யப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: டெல்லி வளர்ச்சி மேம்பாட்டு ஆணையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் தான் 2.5 வருடமாக வன்புணர்வு செய்யப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தன்னுடன் பணிபுரியும் உயர் அதிகாரிகள் தன்னை மிரட்டி இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் இந்த செயலை வீடியோவும் எடுத்து வைத்துள்ளனர். அதே வீடியோவை வைத்து தற்போது தன்னை மிரட்டி வருவதாகவும் அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தற்போது அவரின் வாக்குமூலம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்து இருக்கிறது. அரசு அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பு குறித்து இது கேள்வி எழுப்பி இருக்கிறது.

அரசு வேலை
டெல்லி வளர்ச்சி மேம்பாட்டு ஆணையத்தில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் மரணம் அடைந்த காரணத்தால் அவரது மனைவிக்கு 2014ம் ஆண்டு வேலை கொடுக்கப்பட்டது. மத்திய அரசுக்கு சொந்தமான ஆணையத்தில் அந்த பெண் பணிக்கு சேர்ந்ததில் இருந்து பல வகையில் துன்பங்களை அனுபவித்து இருக்கிறார். அவரது உயர் அதிகாரிகள் சிறிய அளவில் பாலியல் தொல்லைகள் கொடுத்து இருக்கிறார்கள்.

2.5 வருடமாக வன்புணர்வு
இந்த நிலையில் அந்த பெண்ணை மூன்று உயர் அதிகாரிகள் சேர்ந்து மிரட்டி இருக்கிறார்கள். மேலும் கடந்த 2.5 வருடமாக அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் அலுவலகத்திற்கு வராமல் விடுமுறை எடுக்கும் நாட்களில் போன் செய்து தொல்லை கொடுத்துள்ளனர். சமயங்களில் வீட்டிற்கும் வந்து தொல்லை கொடுத்துள்ளனர்.

கொலை மிரட்டல்
இந்த நிலையில் 2.5 வருடமாக நடந்த சம்பவம் அனைத்தையும் அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ வேறு எடுத்து வைத்துள்ளனர். அந்த வீடியோவை வைத்து அந்த பெண்ணை மிரட்டி அவரிடம் பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்க முடியாது என்றால் கொன்றுவிடுவோம் என்றும் கூறியுள்ளனர். கடந்த ஒரு மாதமாக அவர்களுக்கு பயந்து அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து இருக்கிறார் அந்த பெண்.

போலீசில் புகார்
அவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமானதை அடுத்த தற்போது அந்த பெண் டெல்லி வளர்ச்சி மேம்பாட்டு ஆணைய தலைமையகத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. டெல்லி தெற்கின் துணை கமிஷனர் ரூமில் பணியா இந்த சம்பவத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications