மொத்த ஊரே அண்ணாந்து பார்க்குது.. ஒரே பழத்தை வைத்தே.. கோடிகளில் சம்பாதித்த இளைஞர்.. எப்படி?
போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இளம் விவசாயியான ஹர்ஷித் கோதா அவகாடோ பழங்களை விளைய வைத்து வருடத்திற்கு 1 கோடி ரூபாய் வரை சம்பாதிக்க தொடங்கி உள்ளார். மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் அவகாடோ வளருவதற்கு ஏற்ற வானிலை கொண்ட மாநிலங்கள் கிடையாது. அவை கடுமையான வெப்பம் கொண்ட மாநிலங்கள் ஆகும்.
பொதுவாக, அவகாடோ பழங்கள் வடகிழக்கு இந்தியா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் விளைகின்றன. ஏனெனில் அவை வளர 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை மட்டுமே தேவைப்படுகின்றன. அதற்கு மேல் அல்லது அதற்கு கீழ் வெப்பநிலை இருந்தால் அவகாடோ பழம் தாக்கு பிடிக்காது.

அவகாடோ துணை வெப்பமண்டல பழமாகும், இது வட இந்தியாவின் வெப்பமான மற்றும் உறைபனி காற்றில் வளர வாய்ப்பே கிடையாது. ஆனால் அதையும் மீறி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இளம் விவசாயியான ஹர்ஷித் கோதா அவகாடோ பழங்களை விளைய வைத்து சாதனை படைத்துள்ளார்.
அதோடு வருடத்திற்கு 1 கோடி ரூபாய் வரை சம்பாதிக்க தொடங்கி உள்ளார் ஹர்ஷித் கோதா . விவசாயம் மீது இருந்த திடீர் ஆர்வத்தால் இஸ்ரேலில் இருந்து முதலில் 10 மரக்கன்றுகளை இறக்குமதி செய்துள்ளார், அதை வைத்து விவசாயம் செய்து.. தற்போது போபாலில் 10 ஏக்கர் அளவிற்கு அவகாடோ தோட்டங்களை வைத்துள்ளார். ஆனால் 30 வயதே ஆன.. இந்த நகர்ப்புற விவசாயியால் எப்படி போபாலில் கடுமையான வானிலையில் அவகாடோ பழங்களை வெற்றிகரமாக பயிரிட முடிந்தது?

பின்னணி: போபாலில் பிறந்து வளர்ந்த ஹர்ஷித்துக்கு, விவசாயம் என்பது எப்போதும் அவர் திட்டத்தில் இருந்ததே இல்லை. சிறுவயதிலிருந்தே மார்க்கெட்டிங் மீது ஆர்வம் கொண்டிருந்த அவர், பள்ளிப்படிப்புக்குப் பிறகு, வணிகம் படிக்க இங்கிலாந்து சென்றார்.
என் குடும்பத்தில் யாரும் விவசாயத்தில் இல்லை, நான் விவசாயத் துறையில் இணைவேன் என்று நான் நினைக்கவில்லை. 2017 இல், நான் பிபிஏ பட்டப்படிப்பைத் படித்தேன், மேலும் மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட விரும்பினேன்
அவகாடோ பழங்கள் நமக்கு மிக எளிதாகக் கிடைக்கக்கூடியதாகவும், அதிக சத்து நிறைந்ததாகவும் இருந்தது. நான் அவற்றை சாப்பிடுவதை விரும்பினேன்.. எனக்கு அதன் டெஸ்ட் ரொம்ப பிடிக்கும். இங்கிலாந்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அவற்றை சாப்பிட்டேன். ஒரு நாள்.. நான் அவகாடோ பெட்டியைப் புரட்டி எதேர்ச்சையாக் பார்த்தேன். அது இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டது என்று எழுதப்பட்டது.

திடீரென யோசித்த நான்.. இஸ்ரேல் போன்ற வறண்ட மற்றும் வெப்பமான நாடுகளில் அவகாடோ பழங்களை எப்படி வளர்க்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்தேன். இஸ்ரேல் வெப்பமான பூமி. கிட்டத்தட்ட இந்தியா போன்ற நிலப்பரப்பை கொண்டது. அங்கே எப்படி அவகாடோ வளர்க்கிறார்கள் என்ற கேள்வி இருந்தது.
இதை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்தேன்.. அதன் முடிவுகளில் இந்தியாவிலும் எப்படி அவகாடோ வளர்க்கலாம் என்பது குறித்து மேலும் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினேன் என்று கூறியுள்ளார் ஹர்ஷித் கோதா.

இஸ்ரேல் வானிலைக்கு ஏற்றபடி உரங்கள், நீர் ஆகியவற்றை கொடுத்து, பல்வேறு வகை பழங்களை வெற்றிகரமாக வளர்த்துள்ளது மற்றும் புதிய கலப்பின வகைகளையும் உருவாக்கியுள்ளது என்பதை நான் கண்டுபிடித்தேன். அதை இந்தியாவில் செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.
உடனே விவசாயம் மீது இருந்த திடீர் ஆர்வத்தால் இஸ்ரேலில் இருந்து முதலில் 10 மரக்கன்றுகளை இறக்குமதி செய்தேன், அதை வைத்து விவசாயம் செய்து.. தற்போது போபாலில் 10 ஏக்கர் அளவிற்கு அவகாடோ தோட்டங்களை வைத்துள்ளேன், என்று நம்பிக்கையாக கூறுகிறார் ஹர்ஷித் கோதா.












Click it and Unblock the Notifications