எப்போ கல்யாணம் பண்ணிக்குவ? திருமணத்திற்கு வற்புறுத்திய கள்ளக்காதலியை போட்டுத்தள்ளிய இளைஞர்!
மகாராஷ்டிராவில் திருமணத்திற்கு வற்புறுத்திய கள்ளக்காதலியை கள்ளக்காதலன் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

மும்பை: மகாராஷ்டிராவில் திருமணத்திற்கு வற்புறுத்திய கள்ளக்காதலியை கள்ளக்காதலன் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாவபிவண்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி பிரியங்கா சாவந்த். இவர் அண்மையில் மாயமானார்.
இந்நிலையில் கடந்த மாதம் 3ஆம் தேதி பால்கர் மாவட்டம் மனோர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

கொலை
இதில் பிணமாக மீட்கப்பட்ட பெண் பிரகாஷின் மனைவி பிரியங்கா சாவந்த் என்பது தெரியவந்தது. மர்ம நபர் யாரோ அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு உடலை காட்டில் வீசியதும் தெரியவந்தது.

கள்ளக்காதல்
இதுதொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். அதில் கொலை செய்யப் பட்ட பிரியங்கா சாவந்த், வாடா தாலுகாவை சேர்ந்த கணேஷ் என்ற இளைஞருடன் அடிக்கடி இருசக்கர வாகனத்தில் சென்று வந்தது தெரியவந்தது.

அதிர்ச்சி தகவல்
இதையடுத்து போலீசார் கணேஷை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்தான் பிரியங்கா சாவந்தை கொலை செய்தார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

உல்லாசம்
பிரியங்கா சாவந்திற்கும், கணேசுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

திருமணத்திற்கு வற்புறுத்தல்
இந்நிலையில் பிரியங்கா சாவந்த் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கணேசை வற்புறுத்தி உள்ளார். இதனால் எரிச்சல் அடைந்த கணேஷ், பிரியங்கா சாவந்தை கொலை செய்ய திட்டமிட்டார்.

கழுத்தை நெரித்து கொலை
அதன்படி சம்பவத்தன்று பிரியங்கா சாவந்தை மனோர் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கணேஷ் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications