மயக்க மருந்து தந்து 3 நாள் நடந்த கொடூரம்! சிறுமியை சீரழித்த சைக்கோ இளைஞன் .. தாயுடன் கைது

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் சிறுமிக்கு போதை பொருள் கொடுத்து மூன்று நாட்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் இளைஞருக்கு அவருடைய தாயே உதவியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் வசித்து வருபவர் தேவகி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 40 வயது பெண்மணியான இவர் பியூட்டிபார்லர் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவருக்கு உதவுவதற்காக இவர்கள் குடியிருப்பில் உள்ள சிறுமி ஒருவர் இவருடன் பணியாற்றியுள்ளார். சிறுமிக்கு பியூட்டிசியன் கோர்ஸ் படிக்க வேண்டும் என்று ஆசை.

பியூட்டிசியன் கோர்ஸ்

பியூட்டிசியன் கோர்ஸ்

எனவே ஒரே குடியிருப்பில் வசிப்பவர்கள்தானே என்று இவர்களுடன் சேர்ந்து சிறுமி பணியாற்றி வந்துள்ளார். அப்போதுதான் தேவகியின் 18 வயது மகன் சிறுமிக்கு அறிமுகமாகியுள்ளார். இருவரும் அடிக்கடி பேசி பழகி வந்துள்ளனர். ஆனால் இந்த இளைஞன் சிறுமியை தவறான கண்ணோட்டத்திலேயே அணுகியுள்ளார். பலமுறை காதலிப்பதாக சிறுமியிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால் சிறுமி இதற்கு இணங்கவில்லை. எனவே சிறுமியை அடைய இளைஞன் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக தன்னுடைய நண்பர்களிடம் கலந்தாலோசனை செய்ததில் அவர்கள் மயக்க மருந்து குறித்து கூறியுள்ளனர். இதனையடுத்து இளைஞன் மயக்க மருந்தை வாங்கி தயாராக வைத்துள்ளார்.

மயக்க மருந்து

மயக்க மருந்து

கடந்த செவ்வாய்க்கிழமை தேவகியை சந்திக்க அவரது வீட்டுக்கு சிறுமி வந்திருக்கிறார். அப்போது தான் தயாராக வைத்திருந்த மயக்க மருந்தை பயன்படுத்தி சிறுமியை இளைஞன் மயக்கமடைய செய்திருக்கிறார். அதன் பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்தவுடன் ஏதேதோ சொல்லி சமாளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். மயக்கத்தில் இருந்தபோது என்ன நடந்தது என்பது குறித்து சிறுமிக்கு தொடக்கத்தில் தெரியவில்லை. ஆனால் இதேபோல அடுத்து இரண்டு நாட்களும் நடந்திருக்கிறது.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

அதாவது சிறுமி அந்த வீட்டுக்கு போவதும் திடீரென மயக்கம் போட்டு விழுவதும் நடந்திருக்கிறது. இதனையடுத்து மூன்றாவது நாள் தான் மயக்கம் போட்டு விழுந்த பின்னர் தன்னுடைய ஆடைகள் களைந்திருப்பதை சிறுமி உணர்ந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிய பின்னர் இது குறித்து யோசித்துள்ளார். தான் எப்படி மயக்கமடைந்தோம் என்பது குறித்து தெரிந்துகொள்ள மீண்டு அதே வீட்டு சென்றுள்ளார். அப்போது அந்த இளைஞன் கையில் மயக்க மருந்துடன் தயாராக இருந்ததை தெரிந்துகொண்டு தப்பி வீட்டிற்கு வந்து பெற்றோர்களிடம் புகார் அளித்திருக்கிறார்.

தாயும் உடந்தை

தாயும் உடந்தை

புகாரின் அடிப்படையில் முதலில் இளைஞன் கைது செய்யப்பட்டான். சம்பவத்தில் இளைஞனுக்கு யாரெல்லாம் உதவியுள்ளார்கள் என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் இளைஞனின் தாயாரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய தேவகியும் துணை போயுள்ளார். இதனையடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல இளைஞனுக்கு மயக்க மருந்து எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் பாலத்கார குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை தவிர்க்க பெண்களை போக பொருளாக சித்தரிக்கும் சினிமா, விளம்பரங்கள் மற்றும் இலக்கியங்களை தடை செய்ய வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+