அரசுக்கு கட்டாயம்.. தனியாருக்கு தேவையில்லை.. ஆதார் தீர்ப்பின் முழு விபரம்!
ஆதார் கட்டாய சட்டத்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பின் முழு விபரம்.
Recommended Video

டெல்லி: ஆதார் கட்டாய சட்டத்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பின் முழு விபரம்.
அரசின் சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமா என்று வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி, டி.ஒய் சந்திரசாத், அசோக் பூஷன் ஆகிய ஐந்து நீதிபதிகளின் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
இதில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏஎம் கான்வில்கர், ஏ.கே சிக்ரி ஒரே தீர்ப்பை அளித்து உள்ளனர். 5 பேரில் 3 நீதிபதிகள் தீர்ப்பை சிக்ரி வாசித்தார். மற்ற 2 நீதிபதிகள் வேறு தீர்ப்பு வழங்கினாலும் சிக்ரி தீர்ப்பே இறுதியானதாகும்.
அவர்கள் வழங்கிய தீர்ப்பின் முழு விபரம்.

ஆதார் என்ன?
ஆதார் அட்டைக்கும் மற்ற அட்டைகளுக்கும் வித்தியாசம் உள்ளது. ஆதார் தனித்துவமானது. போலி ஆதார் அட்டை தயாரிக்க முடியாது. எல்லோருக்கும் அடையாளம் கொடுத்தது ஆதார். ஆதாருக்காக குறைந்தபட்ச தகவல்களே பெறப்படுகின்றன.
[அரசியல் சட்டப்படி ஆதார் செல்லும்.. அரசு சேவைகளுக்கு கட்டாயம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ]

தேவையா ?
ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் சட்டத்தை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆதார் கட்டாய சட்டம் சரியாக உள்ளது. இதில் சில திருத்தங்களை மட்டும் செய்கிறோம். ஆதார் அட்டை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது. சிறு திருத்தங்கள் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுரை செய்யப்பட்டுள்ளது.

அரசு
ஆதார் பாதுகாப்பானது. ஆதார் அட்டையை அரசு பணிகளுக்கு கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். அரசு சார்ந்த பணிகள் அனைத்திற்கும், சலுகைகளை பெறுவதற்கு ஆதார் அவசியம். ஆதார் மூலம் பணிகள் வேகமாக முடியும். அரசு சார்ந்த திட்டங்களில் பெற ஆதார் அவசியம் ஆகும்.

பாதுகாப்பு கட்டாயம்
ஆதார் பாதுகாப்பு மட்டும் கடுமையாக்கப்பட வேண்டும்.குறைந்தபட்ச தகவல்களுக்காக மட்டுமே ஆதார் எண்ணைக் கேட்க வேண்டும். ஆதார் எண் விவரங்களை பாதுகாக்க வலுவான கட்டமைப்பு தேவை. இந்த பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

தனியார் நிறுவனங்கள்
தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரம் கேட்பது சட்ட விரோதம். தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் விவரத்தை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு நீக்கப்பட்டது. இனி தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரத்தை கோர முடியாது. இனி மொபைல் நிறுவனங்கள், சிம் கார்ட் நிறுவனங்கள் என யாரும் ஆதார் விவரங்களை கேட்க முடியாது. கட்டாயம் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்று கோர முடியாது.

பள்ளி கல்வி
பள்ளிகளில் ஆதார் எண் கேட்கக் கூடாது. நீட், சிபிஎஸ்இ தேர்வுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை. ஆதார் இல்லை எனக்கூறி கல்வி உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை மறுக்கக்கூடாது. கல்வி என்பது அடிப்படை உரிமை. அதை தாரை வைத்து தடுக்க கூடாது.

நிதி துறை
எந்தக் காரணம் கொண்டும் தனியாருக்கு ஆதார் விவரத்தை அளிக்க அவசியம் இல்லை. வங்கிக்கணக்குகளை தொடங்க, மொபைல் எண் பெற ஆதார் கட்டாயமில்லை. பான் கார்ட் பெற ஆதார் கட்டாயம். ஆதார் சட்டத்தை நிதிமசோதாவாக ஏற்கலாம் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். பெரும்பான்மையான நீதிபதிகள் வழங்கிய இந்த தீர்ப்பே இறுதியானதாகும்.












Click it and Unblock the Notifications