பஞ்சாபில் கூட திணறிய காங்கிரஸ்.. எகிறி அடித்த ஆம் ஆத்மி! அப்போ பாஜக எங்கே? இனிமேல் இப்படிதானா!
சண்டிகர்: இன்று நாட்டில் மொத்தம் 5 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆத்மி மிக எளிதாக வெற்றி பெற்றது. ஆம் ஆத்மியின் இந்த வெற்றியை அக்கட்சியினர் கொண்டாடித் தீர்க்கிறார்கள். ஆம் ஆத்மி இத்தேர்தலில் பெற்ற வெற்றி ஏன் முக்கியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.!
நாடு முழுக்க 4 மாநிலங்களில் உள்ள 5 தொகுதிகளில் கடந்த வாரம் இடைத்தேர்தல் நடைபெற்றது. குஜராத், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றன. அதில் மக்கள் ஆர்வமாகவே வந்து வாக்களித்தனர். இதற்கிடையே இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பஞ்சாப் இடைத்தேர்தல்
இந்த இடைத்தேர்தலில் பஞ்சாப் லூதியானா மேற்கு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 2022 தேர்தலில் இந்த தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட குர்பிரீத் சிங் கோகி வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வாகி இருந்தார். இருப்பினும், அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆளும் கட்சியாக இருக்கிறது. அங்குப் பிரதான எதிர்க்கட்சியாகக் காங்கிரஸ் உள்ள சூழலில் இரு கட்சிகளுக்கும் தான் பிரதான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தவிர பாஜக, ஷிரோமணி அகாலி தளம், நோஷ்னல் லோச் சேவா மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஆம் ஆத்மி வெற்றி
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆம் ஆத்மி கட்சி ஓரளவுக்கு நல்ல முன்னிலையைப் பெற்றிருந்தது. காங்கிரஸ் இரண்டாவது இடத்திலேயே தொடர்ந்தது. மொத்தம் 14 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், அதில் ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
சஞ்சீவ் அரோரா 35,179 வாக்குகளைப் பெற்று சுமார் 10,637 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மறுபுறம் காங்கிரஸின் பாரத் பூஷன் ஆஷு 24,542 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இதில் பாஜக வேட்பாளர் ஜிவான் குப்தா ஓரளவுக்குக் காங்கிரஸுக்கு போட்டி கொடுத்தார். அவர் 20,323 வாக்குகளைப் பெற்றார். அகாலி தள வேட்பாளர் 8 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றார். மற்றவர்களால் ஆயிரம் வாக்குகளைக் கூடப் பெற முடியவில்லை.
கொண்டாட்டம்
இந்த வெற்றியைப் பஞ்சாப் ஆத்மி கட்சி கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். இதையடுத்து தங்களுக்கு வாக்களித்த மக்களுக்குப் பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சிக்குச் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது. எங்கள் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பகவந்த் மான், சஞ்சீவ் அரோரா என அனைவருக்கும் வாழ்த்துகள். எங்கள் அரசை மக்கள் ஆதரித்தே வருகிறார்கள். அடுத்து வரும் 2027 தேர்தலிலும் ஆம் ஆத்மியே ஆட்சியை அமைக்கும்" என்றார்.
ஆம் ஆத்மிக்கு இந்த வெற்றி முக்கியமானதாகவே இருக்கிறது. ஏனென்றால் பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசுக்குச் செல்வாக்கு குறைந்து வருவதாகவும் மக்களின் அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் அங்குள்ள எதிர்க்கட்சியினர் கூறி வந்தனர். அதை உடைக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது.
காங்கிரஸ் மோசம்
மறுபுறம் காங்கிரஸுக்கு இது சிக்கல்தான். ஏனென்றால் பஞ்சாபில் 2023க்கு முன்பு காங்கிரஸ் மிக வலிமையாக ஆட்சியில் இருந்தது. ஆனால், இப்போது அவர்களால் ஆம் ஆத்மிக்கு கடும் போட்டியைக் கூட தர முடியவில்லை. தொடக்கம் முதலே 2வது இடத்திலேயே நீடித்தது. அதேநேரம் பாஜகவுடன் இரண்டாவது இடத்திற்கு போட்டிப்போடும் நிலைக்கும் தள்ளப்பட்டு இருக்கும்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications